யமஹா நிறுவனத்தின் பிரபலமான பைக்காக விளங்கி வரும் புதிய யமஹா R15 வெர்சன் 3.0 பைக்கின் விலையை 2,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக யமஹா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் எதையும் யமஹா இந்திய நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றபோதும், விலை உயர்த்தப்பட்டுள்ளதை டீலர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த விலை உயர்வு குறித்து டீலர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த விலை உயர்வு, யமஹா இந்தியா நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், எதற்காக இந்த விலை உயர்வு என்பது குறித்து நிறுவனம் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை என்றார்.
மூன்றாம் தலைமுறை பைக்கான யமஹா R15 வெர்சன் 3.0, 1.25 லட்ச விலையில், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சூப்பர் ஸ்போர்ட்ஸ் மாடல், 155cc ஆற்றலுடன், லிக்யுட்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் எரிபொருள் இன்ஜெக்ஷடாட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன், மாறும் வால்வு இயக்கம் மற்றும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்றவற்றையும் கொண்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் டுவின்-LED ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் டிஸ்பிளே ஆகியவற்றுடன், 19.3hp ஆற்றல் மற்றும் 15Nm உச்சகட்ட டார்க்யூல் இயக்கம்.
ஆண்டுக்கு 40-45 ஆயிரம் யமஹா R15 வெர்சன் 3.0 பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது..