விரைவில்.., யமஹா மோட்டார் பிஎஸ்6 FZ, FZ-S, YZF-R15 மற்றும் ஃபேசினோ அறிமுகமாகிறது

வரும் டிசம்பர் மாதம் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான FZ, FZ-S, YZF-R15 மற்றும் ஃபேசினோ ஸ்கூட்டர் போன்ற மாடல்களை இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப ஹீரோ உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது என்ஜினை மேம்படுத்தி உள்ளன. இந்நிலையில் முதன்முறையாக இரு சக்கர வாகன சந்தையில் ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில், நவம்பரில் ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் பிஎஸ் 6 மாடலை வெளியிட உள்ளன.

சில நாட்களுக்கு முன்பாக வெளியான தகவலின்படி, பிஎஸ்6 என்ஜின் பெற்ற யமஹா FZ, FZ-S மற்றும் ஆர்15 விபரங்கள் கிடைத்துள்ளன.  BS-VI  மாசு உமிழ்வுக்கு இணக்கமான YZF-R15 பைக்கின் 155cc என்ஜின் பவர் 13.7 கிலோவாட் அல்லது 18.64 பிஎஸ் வழங்கும் என ஆவணம் வெளிப்படுத்துகிறது. BS-IV பைக் மாடல், யமஹா YZF-R15 V3.0 அதிகபட்ச சக்தியை 14.2 கிலோவாட் அல்லது 19.3 பிஎஸ் வெளிப்படுத்தியது.

அடுத்து, BS-VI மாசு உமிழ்வுக்கு இணக்கமான FZ மற்றும் FZS அதன் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் வெளிப்படுத்தும். BS-IV பைக் மாடல், 9.7 கிலோவாட் அல்லது 13.2 பிஎஸ் அதிகபட்ச சக்தியை வழங்குகின்து. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். மூன்று பைக்குகளின் பவரும் குறைக்கப்பட்டுள்ளது.

யமஹா மோட்டார் நிறுவனம் முன்பே குறிப்பிட்டிருந்தபடி, பிஎஸ் 6 மாடல்கள் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனைக்கு வரும்போது கூடுதலாக இந்த மாடல்களில் சைடு ஸ்டேண்ட் உள்ள சமயங்களில் ஸ்டார்ட் ஆகுவதனை தடுக்கும் வசதியுடன் விற்பனையில் உள்ள மாடல்களை விட 10-15 % வரை விலை உயர்த்தப்பட்டிருக்கும்.

மேலும் வாசிங்க – பிஎஸ்6 என்றால் என்ன ? அதன் சிறப்புகள்