Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.1.39 லட்சத்தில் யமஹா ஆர்15 V3 ஏபிஎஸ் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
January 10, 2019
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

60ab5 yamaha r15 v3.0 darknight

ரூ.1.39 லட்சம் விலையில் யமஹா ஆர்15 V3 பைக் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் உட்பட புதிதாக டார்க்நைட் கலர் யமஹா ஆர்15 மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 V3.0 ஏபிஎஸ்

மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய ஆர்15 ஸ்போர்ட்டிவ் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புதிய நிறமாக டார்க்நைட் சேர்க்கப்பட்டுள்ள மாடல் ரூ.1.41 லட்சம் விலையிலும் மற்ற மாடல்கள் ரூ.1.39 லட்சத்தலும் கிடைக்கின்றது.

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் விற்பனைக்கு வந்த யமஹா ஆர்15 சாதாரன மாடலை விட ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் ரூ.12,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்15 மாடலில் மிக நேர்த்தியான இரட்டை பிரிவு எல்இடி ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் மற்றும் சிறப்பான டிசைனிங் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் முந்தைய மாடலை விட கூடுலாக பவரை வெளிப்படுத்தும் 19.1 ஹெச்பி வரையிலான பவர், 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவற்றை பெற்றுள்ளது.

d8158 yamaha r15 thunder grey

மிக நேர்த்தியான டெல்டாபாக்ஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்15 பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், டயரில்  282 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்படுள்ளது. 137 கிலோ எடை கொண்டுள்ள ஆர்15 பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக் விலை பட்டியல்

யமஹா ஆர்15 பைக் விலை ரூ.1.39 லட்சம்

யமஹா ஆர்15 பைக் டார்க்நைட் மாடல் விலை ரூ- 1.41 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

Tags: YamahaYamaha YZF-R15 V3.0யமஹா ஆர்15யமஹா ஆர்15 V3
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan