மார்ச் மாதம் 15ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள, புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முன்பதிவு சில முன்னணி டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எம்டி-15 பைக்கை முன்பதிவு செய்துக் கொள்ள ரூ.5000 செலுத்த வேண்டும்.
யமஹா எம்டி-15
பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள யமஹா ஆர்15 பைக்கின் நேக்டூ ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடலான எம்டி15 பைக்கில் மிக ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட் யூனிட் இடம்பெற்று அசத்தலான ஸ்போர்ட்டிவ் தன்மையை வழங்குகின்றது.
YZF-ஆர்15 வெர்ஷன் 3.0 மாடலில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், எம்டி15 பைக்கில் 19.1 ஹெச்பி வரையிலான பவர், 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவற்றை பெற்றிருக்கும்.
282 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகின்றது.
ரூ.1.27 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள யமஹா எம்டி15 பைக்கிற்கு சில முன்னணி நகரங்களில் அமைந்துள்ள டீலர்கள் முன்பதிவை தொடங்கியுள்ளனர். எம்டி15 பைக்கினை முன்பதிவு செய்துக் கொள்ள ரூ.5,000 செலுத்த வேண்டியிருக்கும். எம்டி-15 பைக்கின் டெலிவரி மார்ச் மாதம் மத்தியில் தொடங்க உள்ளது.
கேடிஎம்125, பல்சர் NS200 ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் மாடலாக யமஹா எம்டி15 பைக் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Yamaha MT-15 image gallery