Bike News

இந்தியாவிற்கு பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் யமஹா

2023 Yamaha e-01 electric scooter

இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் மிகவும் அதிகப்படியான ரேஞ்சு மற்றும் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட யமஹா மோட்டார் திட்டமிட்டுள்ளது.

முன்பாக, இந்தியாவில் யமஹா நியோஸ் ஸ்கூட்டரை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், அந்த மாடலின் ரேஞ்சு வெறும் 37 கிமீ ஆக உள்ளதால் இந்த திட்டத்தை கைவிட்டுள்ளது. இதனை 100 கிமீ ரேஞ்சு கொண்டு வருவது சிரமம் என்பதனால் நியோஸ் அறிமுகத்தை ரத்து செய்துள்ளது.

New Yamaha Escooter

ஐரோப்பா மற்றும் இந்திய சந்தைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை கருத்தில் கொண்டுள்ளோம் என இந்திய யமஹா மோட்டார் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற காரணங்களுக்காக வாங்கும் ஐரோப்பாவில் இருந்து வேறுபட்டவர் என்பதை கவனிக்க முடிகின்றது என சிஹானா கூறுகிறார். “இந்தியாவில், குறைந்த பராமரிப்பு செலவு, பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதார மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மின்சார வாகனங்களை வாங்குகின்றனர்.

ஆனால், அவர்கள் பட்ஜெட் விலை பைக்குகளை விட எங்களுடைய பிரீமியம் ரக ஆர்15 மற்றும் எம்டி-15 ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே, இதனை கருத்தில் மதிப்புமிக்க ஸ்போர்ட்டிவான, அதிக ரேஞ்சு வழங்கும் மாடலை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கான இந்தத் திட்டத்தில் யமஹா ஏற்கனவே ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கிவிட்டது. இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குள் முதல் மாடலை எதிர்பார்க்கலாம். யமஹா நியோஸ் இ-ஸ்கூட்டருக்காக எதிர்பார்த்த சிலர் ஏமாற்றம் அடைந்தாலும், பிரீமியம் மாடலை கொண்டு வருவது வரவேற்க்கப்பட வேண்டிய விஷயமாகும்.

source

 

 

Share
Published by
MR.Durai