
மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XSR155 நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்று மிகவும் சக்திவாய்ந்த 155cc என்ஜினுடன் இந்திய சந்தையில் ரூ.1,49,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
70வது ஆண்டு விழாவை கொண்டாடும் யமஹா நிறுவனம் இந்தியாவில் நடப்பு 2025-2026 ஆம் நிதியாண்டில் 10 புதிய மாடல்கள் உட்பட 20க்கு மேற்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், முக்கியமாக இந்தியாவில் FZ-Rave, ஏரோக்ஸ் E, ஏரோக்ஸ் EC-06 என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் வெளியிட்டுள்ளது.
சேசிஸ் யமஹாவின் டெல்டாபாக்ஸ் கொடுக்கப்பட்டு ஆர்15, எம்டி-15 என இரண்டிலும் உள்ள அதே 18.1 hp , 14.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 155cc லிக்யூடு கூல்டு எஞ்சின் பெற்று ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைந்து அசிஸ்ட்-அண்ட்-ஸ்லிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
ட்ராக்ஷன் கண்ட்ரோலுடன் அப்சைடு டவுன் ஃபோர்க் கொண்டு பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று அலுமினியம் ஸ்விங்கார்ம் கொடுக்கப்பட்டுள்ளதால், எடை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் நிலையில் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
மெட்டாலிக் கிரே, விவிட் ரெட், கிரேய்ஷ் கிரீன் மெட்டாலிக் மற்றும் மெட்டாலிக் ப்ளூ என நான்கு நிறங்களுடன் இந்த புதிய யமஹா XSR155 பைக்கில் கூடுதலாக ஸ்க்ராம்ப்ளர் பேக் உயரமான நிலைப்பாடு மற்றும் லேசான-பாதை குறிப்புகளைச் சேர்க்கிறது, அதே நேரத்தில் கஃபே ரேசர் பேக் ஒரு ஸ்போர்ட்டியர் இருக்கை மற்றும் ஸ்டைலிங் கொண்டுவருகிறது.

