யமஹா மோட்டார் நிறுவனத்தின், ஆர் 15 என்ஜினை பெற்ற XSR 155 பைக் மிக நேர்த்தியான நியோ ரெட்ரோ ஸ்டைலை கொண்டிருப்பதுடன் நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது. இந்தியர்களின் மிகப்பெரும் அளவில் எதிர்பார்க்கின்ற மாடலாக எக்ஸ்எஸ்ஆர் 155 விளங்குகின்றது.
சமீபத்தில் யமஹா மோட்டார் இந்தியா தனது ஸ்கூட்டர் மாடலான ஃபேசினோ அடிப்படையில் 125 சிசி என்ஜின் பெற்ற மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், ரே இசட்ஆர் 125, ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளது. இது தவிர இந்நிறுவனம் பிஎஸ் 6 யமஹா எம்டி-15 மாடலை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது டீலர்களை பீரிமியம் தரத்தில் உயரத்த ப்ளூ ஸ்குயர் என்ற பெயரில் 100 டீலர்களை நாடு முதற்கட்டமாக நாடு முழுவதும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மேலும், தொடக்க நிலை சந்தையான 100சிசி பிரிவில் இருந்து யமஹா வெளியேற திட்டமிட்டுள்ளது. தனது ஸ்கூட்டர்கள் உட்பட அனைத்து மாடல்களையும் பிஎஸ் 6 என்ஜின் பெற்றதாக வெளியிடும் போது 125சிசி க்கு கூடுதலான என்ஜினை மட்டுமே பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், புதிய வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற யமஹா XSR 155 பைக்கில் யமஹா YZF-R15 பிஎஸ்6 என்ஜினை பெற உள்ள இந்த மாடலில் 10,000 ஆர்.பி.எம்-ல் 18.3 பிஹெச்பி பவரையும், டார்க் 14.1Nm ஆக குறைந்துள்ளது. ஆறு வேக கியர்பாக்ஸுடன் சிலிப்பர் கிளட்ச் பெற்ற என்ஜின் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 விற்பனைக்க வருவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. அனேகமாக இந்தியாவில் எக்ஸ்எஸ்ஆர் 155 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டால் ரூ.1.45 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலை அமையலாம். ஆனால் இதுவரை யமஹா உறுதியாக இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் குறித்தான தகவலை அறிவிக்கவில்லை.
[youtube https://www.youtube.com/watch?v=8dB_ak42NcQ]