வரும் நவம்பர் 11 ஆம் தேதி இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் புதிய நியோ ரெட்ரோ ஸ்டைலில் பெற்ற XSR 155 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அனேகமாக ரூ.1.65 லட்சத்திற்குள் எதிர்பார்க்கலாம்.
இந்தியளவில் பிரசத்தி பெற்ற ஆர்15 மற்றும் எம்டி-15 என இரு மாடல்களின் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற எக்ஸ்எஸ்ஆர் 155 மாடல் மிக நேர்த்தியான ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பினை பெற்று வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பெற்று மிக நேர்த்தியான எல்இடி டெயில் விளக்கினை கொண்டுள்ளது.
சர்வதேச அளவில் சில நாடுகளில் விற்பனையில் உள்ள எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலின் விலை சில நாடுகளில் எம்டி-15 ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டீரிட் பைக்கின் கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்திய சந்தைக்கான பைக்கின் விலை ரூ.1.50 முதல் ரூ.1.65 லட்சத்திற்குள் வரக்கூடும்.
இந்த பைக்கில் 155cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு இயந்திரம் 10,000ஆர்பிஎம்மில் 18.4 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டிருக்கலாம்.