Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bajaj

2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்

By MR.Durai
Last updated: 27,May 2024
Share
3 Min Read
SHARE

2024 bajaj auto pulsar ns200

இந்தியாவின் முன்னணி ஸ்போர்ட் பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோவின் 200சிசி சந்தையில் உள்ள பல்சர் NS200 மாடலில் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட வசதிகள் பெற்ற பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2024 Bajaj Pulsar NS200
  • பஜாஜ் பல்சர் என்எஸ்200 நுட்பவிரங்கள்
  • பஜாஜ் பல்சர் NS200 நிறங்கள்
  • 2024 Bajaj Pulsar NS200 on-Road Price Tamil Nadu
  • Bajaj Pulsar NS200 rivals
  • Faq Bajaj Pulsar NS200
  • 2024 Bajaj Pulsar NS200 Bike Image Gallery

2024 Bajaj Pulsar NS200

புதிய என்எஸ் பைக்குகள் மற்றும் அனைத்து பல்சர் பைக்குகளும் சமீபத்தில் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டுள்ள வரிசையில் உள்ள NS200 மாடலில் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் 200 பேட்ஜிங் பெற்றுள்ள பைக்கில் காக்டெயில் சிவப்பு-வெள்ளை, பீவெட்டர் கிரே -ப்ளூ, மெட்டாலிக் பேர்ல் வெள்ளை மற்றும் இபோனி கருப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

பெரீமீட்டர் ஃபிரேம் கொண்டுள்ள இந்த பைக்கில் தொடர்ந்து 199.5cc லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த பைக்கில் உள்ள 6 வேக கியர்பாக்ஸ் அமைந்திருக்கின்றது.

2024 பல்சர் என்எஸ்200 மாடலின் பரிமாணங்கள் 2017 மிமீ நீளம், 804 மிமீ அகலம் மற்றும் 1075 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,363 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 805 மிமீ மற்றும் 168 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

பல்வேறு இடங்களில் கார்பன் ஃபைபர், புதிய எல்இடி ஹெட்லைட் உடன் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது.

158 கிலோ எடை கொண்டு 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS200 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.

புதிய மாடலில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டரை ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் உள்ளன.

2024 பஜாஜ் பல்சர் NS200 விலை ரூ.1,58,976

(All Prices Ex-Showroom Tamil Nadu)

2024 பஜாஜ் பல்சர் NS200

பஜாஜ் பல்சர் என்எஸ்200 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke –
Displacement (cc) 199.5 cc
Compression ratio –
அதிகபட்ச பவர் 24.5  PS at 9,750 rpm
அதிகபட்ச டார்க் 18.74 Nm  at 8000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் பெரீமீட்டர் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 300 mm
பின்புறம் டிஸ்க் 230 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 100/80 – 17 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 130/70 – 17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-8Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2017 mm
அகலம் 804 mm
உயரம் 1075 mm
வீல்பேஸ் 1363 mm
இருக்கை உயரம் 805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 168 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 158 kg

பஜாஜ் பல்சர் NS200 நிறங்கள்

2024 pulsar ns200 white 1
2024 pulsar ns200 red
2024 pulsar ns200 grey
2024 pulsar ns200 black 1

2024 Bajaj Pulsar NS200 on-Road Price Tamil Nadu

2024 பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

2024 Pulsar NS200 Dual Channel ABS with Digital Cluster – ₹ 1,88,786  (on-road Tamil Nadu)

Bajaj Pulsar NS200 rivals

200cc சந்தையில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ் 200 பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் 200 டியூக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆகியவை உள்ளன.

Faq Bajaj Pulsar NS200

2024 பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் என்ஜின் விபரம் ?

199.5cc லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் NS200 மைலேஜ் விபரம் ?

பல்சர் NS200 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 38 கிமீ முதல் 40 கிமீ வரை கிடைக்கும்.

2024 பஜாஜ் பல்சர் NS200 ஆன்ரோடு விலை பட்டியல் ?

2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 200 ஆன்ரோடு விலை ரூ.1.88 லட்சம் ஆகும்.

2024 பஜாஜ் பல்சர் NS200 டாப் ஸ்பீடு எவ்வளவு ?

2024 பஜாஜ் பல்சர் NS200 டாப் ஸ்பீடு 130KMPH

2024 பஜாஜ் பல்சர் NS200 போட்டியாளர்கள் யார் ?

பல்சர் என்எஸ் 200 பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் 200 டியூக், அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, எக்ஸ்ட்ரீம் 200 உள்ளன.

2024 Bajaj Pulsar NS200 Bike Image Gallery

2024 pulsar ns200 black 1
2024 pulsar ns200 white 1
2024 pulsar ns200 grey
2024 pulsar ns200 red
pulsar ns400z vs ns200 headlight
2024 bajaj pulsar ns200 headlight
2024 bajaj pulsar ns200 ns160 and ns 125 bikes specs and on road price in all over tamil nadu
2024 பஜாஜ் பல்சர் NS200
2024bajaj pulsar ns200 headlight
2024 பஜாஜ் பல்சர் NS200
bajaj pulsar NS200
2023 bajaj pulsar ns200
பல்சர் 125 பைக்
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
TAGGED:200cc Bikesbajaj autoBajaj PulsarBajaj Pulsar NS200
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved