இந்தியாவின் முன்னணி ஸ்போர்ட் பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோவின் 200சிசி சந்தையில் உள்ள பல்சர் NS200 மாடலில் 2025 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட வசதிகள் பெற்ற பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
2025 Bajaj Pulsar NS200
புதிய என்எஸ் பைக்குகள் மற்றும் அனைத்து பல்சர் பைக்குகளும் சமீபத்தில் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டுள்ள வரிசையில் உள்ள NS200 மாடலில் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் 200 பேட்ஜிங் பெற்றுள்ள பைக்கில் காக்டெயில் சிவப்பு-வெள்ளை, பீவெட்டர் கிரே -ப்ளூ, மெட்டாலிக் பேர்ல் வெள்ளை மற்றும் இபோனி கருப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.
பெரீமீட்டர் ஃபிரேம் கொண்டுள்ள இந்த பைக்கில் தொடர்ந்து 199.5cc லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த பைக்கில் உள்ள 6 வேக கியர்பாக்ஸ் அமைந்திருக்கின்றது.
2024 பல்சர் என்எஸ்200 மாடலின் பரிமாணங்கள் 2017 மிமீ நீளம், 804 மிமீ அகலம் மற்றும் 1075 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,363 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 805 மிமீ மற்றும் 168 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
பல்வேறு இடங்களில் கார்பன் ஃபைபர், புதிய எல்இடி ஹெட்லைட் உடன் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது.
158 கிலோ எடை கொண்டு 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS200 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.
புதிய மாடலில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டரை ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் உள்ளன.
பஜாஜ் பல்சர் NS200 விலை ரூ.1,32,496
(All Prices Ex-Showroom Tamil Nadu)
2025 Bajaj Pulsar NS200 on-Road Price Tamil Nadu
பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
Pulsar NS200 Dual Channel ABS with Digital Cluster – ₹ 1,65,987
(on-road Tamil Nadu)
Pulsar NS200 Dual Channel ABS with Digital Cluster – ₹ 1,56,706
(on-road pondy)
பஜாஜ் பல்சர் என்எஸ்200 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | – |
Displacement (cc) | 199.5 cc |
Compression ratio | – |
அதிகபட்ச பவர் | 24.5 PS at 9,750 rpm |
அதிகபட்ச டார்க் | 18.74 Nm at 8000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | பெரீமீட்டர் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 300 mm |
பின்புறம் | டிஸ்க் 230 mm (with ABS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 100/80 – 17 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 130/70 – 17 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-8Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2017 mm |
அகலம் | 804 mm |
உயரம் | 1075 mm |
வீல்பேஸ் | 1363 mm |
இருக்கை உயரம் | 805 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 168 mm |
எரிபொருள் கொள்ளளவு | 12 litres |
எடை (Kerb) | 158 kg |
பஜாஜ் பல்சர் NS200 நிறங்கள்
Bajaj Pulsar NS200 rivals
200cc சந்தையில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ் 200 பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் 200 டியூக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, ஆகியவை உள்ளன.
Faq Bajaj Pulsar NS200
பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் என்ஜின் விபரம் ?
199.5cc லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
2025 பஜாஜ் பல்சர் NS200 மைலேஜ் விபரம் ?
பல்சர் NS200 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 38 கிமீ முதல் 40 கிமீ வரை கிடைக்கும்.
2025 பஜாஜ் பல்சர் NS200 ஆன்ரோடு விலை பட்டியல் ?
பஜாஜ் பல்சர் என்எஸ் 200 ஆன்ரோடு விலை ரூ.1.67 லட்சம் ஆகும்.
பஜாஜ் பல்சர் NS200 டாப் ஸ்பீடு எவ்வளவு ?
பஜாஜ் பல்சர் NS200 டாப் ஸ்பீடு 130KMPH
பஜாஜ் பல்சர் NS200 போட்டியாளர்கள் யார் ?
பல்சர் என்எஸ் 200 பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் 200 டியூக், அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, எக்ஸ்ட்ரீம் 200 உள்ளன.
2025 Bajaj Pulsar NS200 Bike Image Gallery
new gst 2.0 price updated