Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Kawasaki Bikes

கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

By MR.Durai
Last updated: 6,April 2024
Share
4 Min Read
SHARE

kawasaki w175 street

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ரெட்ரோ ஸ்டைலை பெற்ற W175 மற்றும் W175 ஸ்டீரிட் பைக்கின் 2024 மாடலின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் தொழில் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2024 Kawasaki W175
  • Kawasaki W175 on-Road Price in Tamil Nadu
  • Kawasaki W175 rivals
  • Faqs about Kawasaki W175

2024 Kawasaki W175

முந்தைய மாடலை போலவே வந்துள்ள புதிய கவாஸாகி W175 பைக்கில் தற்பொழுது அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர் பெற்ற வேரியண்ட் புதிதாக இரண்டு நிறங்களை பெற்று W175 ஸ்டீரிட் என்ற பெயரில் கிடைக்க துவங்கியுள்ளது.

W175 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 177cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 7,500 rpm-ல் 13hp பவர் மற்றும் 6,000 rpm-ல் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

டபூள் கார்டிள் ஃபிரேம் அடிப்படையில் W175 பைக்கின் முன்புறத்தில் 245 mm டிஸ்க் பிரேக் மற்றும் W175 மாடலில் 270 mm டிஸ்க் பிரேக் பெற்றாலும் பொதுவாக 80/100 -17M/C (46P) மற்றும் பின்புறத்தில் 100/90 -17M/C (55P) 110mm டிரம் பிரேக் உள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது.

W175 ஸ்டீரிட் மாடல் விற்பனையில் உள்ள W175 பைக்கிலிருந்து சிறிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.  W175 மாடல் கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ ஆனால் புதிய மாடல் 152 மிமீ மட்டுமே பெற்றுள்ளது. இருக்கை உயரம் 786.5 மிமீ (790 மிமீ உடன் ஒப்பிடும்போது) சற்று குறைவாகவும், 245 மிமீ முன் டிஸ்க் (270 மிமீ W175) பிரேக்கைப் பெறுகிறது.

w175 red

கவாஸாகியின் டபிள்யூ175 பைக்கின் பரிமாணங்கள் 2005mm நீளம், 805mm அகலம் மற்றும் 1,050mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1320mm வீல்பேஸ் பெற்று 165mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் கொண்ட மாடலின் எடை 135 கிலோ ஆகும்.

  • MY-23 W175 Ebony: Rs.1,22,000/-
  • MY-23 W175 Candy Persimmon Red: Rs.1,24,000/-
  • MY-24 W175 Metallic Graphite Grey: Rs.1,29,000/-
  • MY-24 W175 Metallic Ocean Blue: Rs. 1,31,000/-
  • W175 Street: Rs. 1,35,000/-

(Ex-Showroom)

2024 kawasaki w175 bike

கவாஸாகி W175 தொழில் நுட்பவிபரங்கள்

Kawasaki W175 Specs W175/W175 Street
என்ஜின் 
வகை Air Cooled, SOHC, 4 stroke
Bore & Stroke 65.5 x 52.4mm
Displacement (cc) 177 cc
Compression ratio 9.1:1
அதிகபட்ச பவர் 13 PS at 7,500 rpm
அதிகபட்ச டார்க் 13.2 Nm at 6,000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டபூள் கார்டிள் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 270 mm / 245mm டிஸ்க் (ABS)
பின்புறம் 110 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை ஸ்போக்/அலாய்
முன்புற டயர் 80/100 -17M/C (46P) ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/90 -17M/C (55P) ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி –
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2,005 mm/2,007mm
அகலம் 805 mm/807mm
உயரம் 1,150 mm
வீல்பேஸ் 1,320 mm/1,323 mm
இருக்கை உயரம் 790 mm /786.5
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm /152 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres/ 12.1 L
எடை (Kerb) 135kg/135.2 Kg

கவாஸாகி W175 நிறங்கள்

W175 ஸ்டீரிட் வேரியண்டில் கிரீன் மற்றும் கிரே என இரு நிறங்களுடன் கருங்காலி, பெர்சிமன் சிவப்பு, மெட்டாலிக் கிராஃபைட் சாம்பல் மற்றும் மெட்டாலிக் ஓஷன் ப்ளூ ஆகியவற்றில் கிடைக்க்கின்றது.

2024 kawasaki w175
kawasaki w175 street new
kawasaki w175 street new grey

Kawasaki W175 on-Road Price in Tamil Nadu

2024 கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் என இரு பெருநகரங்களில் டீலரை கொண்டுள்ளது. இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • MY-23 W175 Ebony: Rs.1,52,890
  • MY-23 W175 Candy Persimmon Red: Rs.1,55,670
  • MY-24 W175 Metallic Graphite Grey: Rs.1,60,184
  • MY-24 W175 Metallic Ocean Blue: Rs. 1,62,010
  • W175 Street: Rs. 1,67,405

(on-road Price Tamil Nadu)

Kawasaki W175 rivals

டபிள்யூ175 பைக்கிற்கு நேரடியான போட்டியாளர் இல்லை. ஆனால் யமஹா FZ-X, டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆகியவை உள்ளன.

Faqs about Kawasaki W175

கவாஸாகி W175 பைக்கின் என்ஜின் விபரம் ?

177cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 7,500 rpm-ல் 13hp பவர் மற்றும் 6,000 rpm-ல் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

கவாஸாகி W175 பைக்கின் ஆன்-ரோடு விலை ?

கவாஸாகி W175 ஆன்ரோடு விலை ₹ 1.53 லட்சம் முதல் ₹ 1.68 லட்சம் ஆகும்.

கவாஸாகி W175 டாப் ஸ்பீடு எவ்வளவு ?

கவாஸாகி W175 டாப் ஸ்பீடு 110 kmph

கவாஸாகி W175 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

கவாஸாகி W175 சராசரி மைலேஜ் 45KMPL ஆகும்.

கவாஸாகி W175 போட்டியாளர்கள் யார் ?

W175 பைக்கிற்கு நேரடியான போட்டியாளர் இல்லை. ஆனால், யமஹா FZ-X, டிவிஎஸ் ரோனின் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆகியவை உள்ளன.

Kawasaki W175 Photo Gallery

w175 red
kawasaki w175 ebony
kawasaki w175 grey
kawasaki w175 street new grey
kawasaki w175 street new
kawasaki w175 street 2024
my2024 kawasaki w175 street
kawasaki w175 street
2024 kawasaki w175
2024 kawasaki w175 bike

 

Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved