சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 125சிசி ஸ்கூட்டர் மாடலான ஆக்சஸ் 125 தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
2023 Suzuki Access 125
இந்தியாவின் முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் விளங்கும் ஆக்செஸ் மாடலில் புதிய நிறங்களை பெற்றதாக சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் OBD2 மற்றும் இ20 எரிபொருளுக்கு இணக்கமான, 125cc, ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 124cc இன்ஜின் 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.5 bhp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
ஆக்சஸ் 125சிசி மாடலில் ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என மூன்று விதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது. ரைட் கனெக்ட் எடிசனில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது வழங்கப்பட்டு பெட்ரோல் இருப்பின் அளவு, சராசரி எரிபொருள் மைலேஜ் & நிகழ்நேரத்தில் கிடைக்கின்ற மைலேஜ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
ரைட் கனெக்ட் என்பது ப்ளூடுத் இணைப்பின் வாயிலாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இனகம்மிங் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் காட்சி, தவறிய அழைப்பு மற்றும் படிக்காத எஸ்எம்எஸ் எச்சரிக்கை, எச்சரிக்கையை மீறிய வேகம், ஃபோன் பேட்டரி நிலை ஆகியற்றை டிஜிட்டல் கிளஸ்ட்டரில் அறிந்து கொள்ளலாம்.
டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான ஆப்ஷனை பெறுகின்ற முன்புற டயரில்190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது. ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆக்செஸ் 125 மாடலில் 90/90-12 54J மற்றும் 90/100-10 53J ட்யூப்லெஸ் பெற்றதாக உள்ளது.
ஆக்சஸ் 125 மாடலின் பரிமாணங்கள் நீளம் 1,870mm அகலம் 690mm உயரம் மற்றும் 1,160mm, 1265 mm வீல்பேஸ் கொண்டு கிரவுண்ட் கிளியரண்ஸ் ஆனது 160 மிமீ கொண்டதாக 2023 ஆக்சஸ் 125 ஆனது 104 கிலோ மற்றும் 103 கிலோ (அலாய் வீல்) கொண்டதாவும் 5 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் விளங்குகின்றது. பல்வேறு வசதிகளில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், க்ரோம் பாகங்கள், எல்இடி ஹெட்லைட், ரைட் கனெக்ட் வேரியண்ட் தவிர மற்ற வேரியண்டில் அனலாக் கிளஸ்ட்டர் உள்ளது.
- Standard Edition Drum Brake Variant – ₹ 84,135
- Standard Edition Disc Brake Variant – ₹ 87,836
- Special Edition Disc Brake Variant – ₹ 89,536
- Ride Connect Edition Disc Brake with Alloy Wheel – ₹ 94,235
(ex-showroom Tamil Nadu)
சுசூகி ஆக்சஸ் 125 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 52.5 X 57.4 mm |
Displacement (cc) | 124 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 8.7 hp at 6,750 rpm |
அதிகபட்ச டார்க் | 10 Nm at 5,500 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | ஸ்விங் ஆர்ம் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் / டிரம் |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய்/ ஸ்டீல் |
முன்புற டயர் | 90/90-12 54J ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/90-10 53J ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-4Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1870 mm |
அகலம் | 690 mm |
உயரம் | 1160 mm |
வீல்பேஸ் | 1265 mm |
இருக்கை உயரம் | 773 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5 litres |
எடை (Kerb) | 104 kg/ 103 kg (Alloy) |
சுசூகி ஆக்சஸ் 125 நிறங்கள்
விற்பனையில் உள்ள மூன்று வேரியண்டிலும் சேர்த்து மொத்தமாக 12 விதமான மாறுபட்ட நிறங்களில் கிடைக்கின்றது.
2023 Suzuki Access 125 on-Road Price Tamil Nadu
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Standard Edition Drum Brake Variant – ₹ 99,657
- Standard Edition Disc Brake Variant – ₹ 1,04,036
- Special Edition Disc Brake Variant – ₹ 1,05,936
- Ride Connect Edition Disc Brake with Alloy Wheel – ₹ 1,10,990
(All Price On-road Tamil Nadu)
- Standard Edition Drum Brake Variant – ₹ 94,135
- Standard Edition Disc Brake Variant – ₹ 97,956
- Special Edition Disc Brake Variant – ₹ 99,631
- Ride Connect Edition Disc Brake with Alloy Wheel – ₹ 1,04,035
(All Price on-road Pondicherry)
2023 Suzuki Access 125 Rivals
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் பல்வேறு 125சிசி மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
Faqs about Suzuki Access 125
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?
விற்பனையில் கிடைக்கின்ற 2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் மைலேஜ் 47KMPL ஆகும்.
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் பவர் விபரம் ?
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள 124cc இன்ஜின் 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.5 bhp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்கும்.
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் போட்டியாளர்கள் ?
சுசூகி ஆக்சஸ் 125 போட்டியாளர்கள், டியோ 125 உட்பட ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் பல்வேறு 125சிசி ஸ்கூட்டர்கள் உள்ளன.
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ?
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை ₹ 99,657 – ₹ 1,10,990 ஆகும்.
2023 Suzuki Access 125 Scooter Image Gallery