சுசூகி இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வரவிருக்கும் இ அக்சஸ் ஸ்கூட்டரின் விலை எதிர்பார்ப்புகள், பேட்டரி, ரேஞ்ச், நிறங்கள் மற்றும் சிறப்புகள் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Suzuki e Access
விற்பனையில் உள்ள ICE ஆக்சஸ் ஸ்கூட்டரை விட மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்றுள்ள அக்சஸ் இ-ஸ்கூட்டரில் ஒற்றை 3.072 kWH LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
3.072Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 95 கிமீ பயணிக்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 71 கிமீ கொண்டுள்ளது. , eco, Ride A, மற்றும் Ride B என மூன்று ரைடிங் மோடுகளுடன் ரிவர்ஸ் மோட் பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 70 கிமீ வரை பயணிக்கலாம்.
இதன் சார்ஜிங் நேரம் 650Watts சார்ஜர் மூலம் 0-80 % பெற 4.30 மணி நேரமும் விரைவு சார்ஜர் மூலம் 0-80 % பெற 1 மணி நேரம் 12 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச பவர் 4.1 Kw மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் , பெல்ட் மூலம் பவரை எடுத்து செல்லும் ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
- Eco மோடில் மணிக்கு அதிகபட்ச வேகம் ஆக உள்ள நிலையில் சிறப்பான வகையில் பேட்டரிக்கு பவரை மேம்படுத்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.
- Ride A மணிக்கு 71 கிமீ வேகத்தை எட்டினாலும், மேம்படுத்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
- Ride B ஆனது குறைந்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு மணிக்கு 71 கிமீ வேகத்தை எட்டுவதுடன் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான பெர்ஃபாமன்ஸை வழங்கும்.
4.2 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற இ ஆக்செஸ் மாடலில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கீலெஸ் இக்னிஷன், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.
மெட்டாலிக் மேட் பிளாக் 2, பேர்ல் கிரேஸ் ஒயிட், மற்றும் பேர்ல் ஜேட் கிரீன் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.
இரு டயரிலும் 12 அங்குல வீல் பெற்ற எலெக்ட்ரிக் ஆக்செஸ் மாடலில் முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 100/80-12 56J ட்யூப்லெஸ் டயருடன் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
1305 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள ஸ்கூட்டரின் நீளம் 1860 மிமீ, 715மிமீ அகலம், மற்றும் உயரம் 1135 மிமீ பெற்றதாக அமைந்துள்ளது.
2025 Suzuki e Access 125 on-Road Price Tamil Nadu
2025 சுசுகி இ அக்செஸ் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
முதற்கட்டமாக 30 நகரங்களில் ஜூன் 2025ல் ரூ.1.30 லட்சத்துக்குள் விற்பனைக்கு வரக்கூடும்.
2025 சுசூகி இ அக்சஸ் நுட்பவிபரங்கள்
E-Access Specs | 3.072kwh |
மோட்டார் | |
வகை | எலக்ட்ரிக் |
மோட்டார் வகை | மிட் டிரைவ் IPM மோட்டார் |
பேட்டரி | 3.072kwh |
அதிகபட்ச வேகம் | 71km/h |
அதிகபட்ச பவர் | 4.1kw |
அதிகபட்ச டார்க் | 15Nm |
அதிகபட்ச ரேஞ்சு | 95 km per charge (IDC Claimed) |
சார்ஜிங் நேரம் | (0-100%) 6.7மணி நேரம்
Fast Charging (0-100%) 2.12 மணி நேரம் |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர்போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
ரைடிங் மோட் | Eco, Ride A, Ride B |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோஷாக் |
பிரேக் | |
முன்புறம் | 190 mm டிஸ்க் |
பின்புறம் | 130mm டிரம் |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 100/80-12 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
ஹெட்லைட் | எல்இடி |
சார்ஜர் வகை | Portable 650W |
கிளஸ்ட்டர் | 4.3 tft டிஜிட்டல் கிளஸ்ட்டர் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,860 mm |
அகலம் | 715 mm |
உயரம் | 1135 mm |
வீல்பேஸ் | 1305 mm |
இருக்கை உயரம் | 765 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
பூட் கொள்ளளவு | 17 Litre |
எடை (Kerb) | 122 kg |
சுசூகி இ அக்சஸ் ஸ்கூட்டரின் நிறங்கள்
மெட்டாலிக் மேட் பிளாக் 2, பேர்ல் கிரேஸ் ஒயிட், மற்றும் பேர்ல் ஜேட் கிரீன் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.
சுசூகி இ அக்சஸ் போட்டியாளர்கள்
சுசூகியின் எலக்ட்ரிக் ஆக்செஸ் போட்டியாளர்களாக ஓலா, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், மற்றும் ஹீரோ விடா VX2, ஹோண்டா QC1, ஆக்டிவா e உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
Faq சுசூகி இ அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
சுசூகி இ அக்செஸ் பேட்டரி, ரேஞ்ச் விபரம் ?
3.072Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 95 கிமீ பயணிக்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 71 கிமீ ஆகும்.
e access போட்டியாளர்கள் யார் ?
ஓலா, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், மற்றும் ஹீரோ விடா VX2, ஹோண்டா QC1, ஆக்டிவா e ஆகியவை உள்ளது.