2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 ஜிக்ஸர் SF 250

சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் SF 250 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2025 Suzuki Gixxer SF 250

ஃபேரிங் ஸ்டைல் பெற்றுள்ள ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக் மாடலி தழுவியதாக  எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் தொடர்ந்து மாறுதல் இல்லாமல் வந்தாலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றில் சிறிய மேம்பாடுகளை கொண்டதாக அமைந்துள்ளது.

புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki Eco Performance) உடன் சுசூகி ஆயில் கூலிங் சிஸ்டம் உள்ள நுட்பத்தினை பெற்று 249cc  ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

கூடுதலாக இந்த மாடலில் 85 சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கும் E85 மாடலும் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் இதன் எஞ்சின் 249cc  ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 27.2hp பவர், 22.5NM டார்க் ஆனது 7500rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 Gixxer SF 250 பைக் மாடலின் பரிமாணங்கள் 2,010 மிமீ நீளம், 805 மிமீ அகலம், 1035 மிமீ உயரம் கொண்டு இதன் வீல்பேஸ் 1,345 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 800 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஸ்விங்கார்ம்  மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 110/70R17M/C 54S மற்றும் பின்புறத்தில் 150/60R17M/C 66S டயருடன் இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர் டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ப்ளூடூத் மூலம் இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

  • GIXXER SF 250 (OBD-2B) Rs. 2,11,237
  • GIXXER SF 250 Special Edition (OBD-2B)  Rs. 2,11,737
  • Gixxer SF 250 FFV – Rs.2,16,500

(Ex-showroom)

2025 suzuki gixxer sf 250 new

Suzuki Gixxer SF 250 on-Road Price Tamil Nadu

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • GIXXER 250 (OBD-2B) Rs. 2,57,543
  • GIXXER 250 Special Edition (OBD-2B)  Rs. 2,58,087
  • Gixxer SF 250 FFV – Rs.2,65,675

(All Prices on-road Tamil Nadu)

  • GIXXER 250 (OBD-2B) Rs. 2,32,032
  • GIXXER 250 Special Edition (OBD-2B)  Rs. 2,32,975
  • Gixxer SF 250 FFV – Rs.2,39,565

(All Prices on-road Pondicherry)

2025 சுசூகி ஜிக்ஸர் 250 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகைஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke76mm x 54.9mm
Displacement (cc)249 cc
Compression ratio10:01
அதிகபட்ச பவர்26.5 hp at 9,300 rpm

27.2 hp at 9,300 rpm (E85)

அதிகபட்ச டார்க்22.2 Nm  at 7,300 rpm

22.5 Nm  at 7,500 rpm

எரிபொருள் அமைப்புFuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன்6 ஸ்பீடு
கிளட்ச்வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம்மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம்டிஸ்க் 276 mm (DABS)
பின்புறம்டிஸ்க் 220 mm
வீல் & டயர்
சக்கர வகை கேஸ்ட் அலாய்
முன்புற டயர்110/70R17M/C 54S ட்யூப்லெஸ்
பின்புற டயர்1150/60R17M/C 66S ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி12V 6.0Ah MF
ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம்2010 mm
அகலம்800 mm
உயரம்1035 mm
வீல்பேஸ்1345 mm
இருக்கை உயரம்800 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்165 mm
எரிபொருள் கொள்ளளவு12 litres
எடை (Kerb)161 Kg/ 163Kg

சுசூகி ஜிக்ஸர் SF 250 நிறங்கள்

கருப்பு உடன் சிவப்பு, வெள்ளை உடன் நீலம் மற்றும் கருப்பு என மூன்று விதமான நிறங்களில் ஜிக்ஸர்  250 பைக்கின் 2025 மாடல் கிடைக்கின்றது. இதில் எத்தனால் 85 மாடல் கருப்பு உடன் சிவப்பு, கருப்பு என இரு நிறங்களில் மட்டும் உள்ளது.

2025 Suzuki Gixxer SF 250 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற கேடிஎம் ஆர்சி 250,  ஹீரோ கரீஸ்மா 250ஆர் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs சுசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 250

சுசூகி ஜிக்ஸர் SF 250 என்ஜின் விபரம் ?

ஜிக்ஸர் SF 249cc ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 38 கிமீ தரலாம்.

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.57-2.66 லட்சம் வரை அமைந்துள்ளது.

2025 Suzuki Gixxer SF 250 Bike Image Gallery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *