பிரசத்தி பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலில் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.13.48 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்ரெட்டா டீசல் மாடலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கிடைத்து வந்தது.
காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் நுழைந்த க்ரெட்டா மாடல் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று அதிகப்படியான முன்பதிவுகளை பெற்று சந்தையில் முன்னனி வகிக்க தொடங்கி உள்ளது. 122 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 154 Nm ஆகும் . இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் தற்பொழுது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட் SX+ யில் மட்டுமே கிடைக்கும்.
மேலும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் 87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும்.
125பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259என்எம் ஆகும் . இதன் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.67கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.01கிமீ ஆகும்.
அடுத்த சில மாதங்களில் 1.4 லிட்டர் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் வர வாய்ப்புகள் உள்ளது. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஹூண்டாய் க்ரெட்டா சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்குகின்றது.