ட்ரையல்பிளேசர் பிரிமியம் எஸ்யூவி கார் நேர்த்தியான வடிவமைப்பில் கம்பீரமான எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது. முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக ட்ரெயில்பிளேசர் இறக்குமதி செயப்படுகின்றது.
தோற்றம்
செவர்லே பாரம்பரிய கிரில் தோற்றத்துடன் கம்பீரமாக விளங்கும் ட்ரையல்பிளேசர் சாலையில் தனித்துவமான தோற்றத்துடன் விளங்குகின்றது.
4.8 மீட்டர் நீளமும் , 1.9 மீட்டர் அகலமும் மற்றும் 1.85மீட்டர் உயரத்துடன் கம்பீரமான ட்ரையல்பிளேசர் எஸ்யூவி காரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 231மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2845மிமீ ஆகும்.
முன்பக்கத்தில் புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் , எல்இடி டெயில் விளக்குகள் , 18 இஞ்ச் அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.
உட்புறம்
இரட்டை வண்ண டேஸ்போர்டில் ஸ்டீயரிங் வீல் ஆடியோ , மொபைல் கன்ட்ரோல் பொத்தான்கள் கொண்டுள்ளது. ஷெவர்லே ட்ரையில்பிளேசர் காரில் உள்ள 7 இஞ்ச் தொடுதிரை மைலிங் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது. பூளூடூத் , ஆக்ஸ் , யூஎஸ்பி , லெதர் இருக்கைகள் , 50;50 ஸ்பீளிட் இருக்கைகள் போன்றவற்றை பெறலாம்.
என்ஜின்
ட்ரையல்பிளேசர் காரில் 200பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 2.8 லிட்டர் டியூரோமேக்ஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 500என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
7 இஞ்ச் தொடுதிரை மைலிங் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி , இஎஸ்சி , டிசிஎஸ் , ரியர் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ரியர்வியூ கேமரா போன்றவற்றை பெற்றுள்ளது.
போட்டியாளர்கள்
செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி காருக்கு போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர் , மிட்ஷுபிசி பஜெரோ ஸ்போர்ட் , ஹூண்டாய் சான்டா ஃபீ , ஃபோர்டு எண்டெவர் , இசுசூ எம்யூ-7 மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டான் போன்ற மாடல்களாகும்.
செவர்லே ட்ரையல்பிளேசர் விலை
செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி கார் விலை ரூ.26,40,000 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) . ரூ.25,000 செலுத்தி அமேசான் தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
Chevrolet Trailblazer SUV launched in India