Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி புக்கிங் ஆரம்பம்

by automobiletamilan
டிசம்பர் 26, 2018
in கார் செய்திகள்

சாங்யாங் டிவோலி எஸ்யூவி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலின் முன்பதிவு டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடல் மிக நேர்த்தியான டிசைன் அம்சத்துடன் வாடிக்கையாளர்களை கவருகின்ற நிலையில், முன்னணி மெட்ரோ நகரங்களில் உள்ள டீலர்கள் வாயிலாக ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது. ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ முன்பதிவு ஜனவரி முதல் தொடங்கப்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

எக்ஸ்யூவி300 காரில் அசத்தலான இன்டிரியர் அமைப்புடன், மிக நேர்த்தியான டிசைனிங் மற்றும் நவீன தலைமுறையினர் விரும்பும் பல்வேறு வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் இடம்பெற உள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புராஜெக்டர் விளக்கு, எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், சன்ரூஃப், எல்இடி டெயில் லைட், 17 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட வசதிகளுடன் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன், எக்ஸ்யூவி300 பாரத் கிராஷ் டெஸ்ட் (Bharat New Vehicle Safety Assessment Program -BNVSAP) தரத்துக்கு ஏற்றதாகவும், டாப் வேரியன்டில் 4 வீல்களுக்கு டிஸ்க் பிரேக், ரியர் வைப்பர், டைமன்ட் கட் அலாய் வீல்,  7 காற்றுப்பைகள், ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

இந்திய சந்தையில் விற்பனை செய்யழப்படுகின்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மஹிந்திரா XUV300 எதிர்கொள்ள உள்ள எஸ்யூவி பிப்ரவரி மாத மத்தியில் விற்பனைக்கு உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்.யு.வி விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரக்கூடும்.

Tags: MahindraMahindra XUV300SUVமஹிந்திரா எக்ஸ்யூவி300
Previous Post

ஜனவரியில் புதிய யமஹா FZ V3 பைக் அறிமுகம்

Next Post

புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் அறிமுகம் விபரம்

Next Post

புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் அறிமுகம் விபரம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version