ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு பல்வேறு கார் நிறுவனங்கள் மாபெரும் விலை குறைப்பை வழங்கி வரும் நிலையில் டாடா நிறுவனம் ரூ. 3300 முதல் ரூ. 2.17 லட்சம் வரை தங்களுடைய கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலையை குறைத்துள்ளது.
டாடா கார் விலை ஜிஎஸ்டிக்கு பிறகு
ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு பிறகு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் விலை குறைப்பை மேற்கொண்டு வரும் நிலையில் நமது நாட்டின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு மாடல்களுக்கு ரூ. 3300 முதல் ரூ. 2.17 லட்சம் வரை விலையை குறைத்துள்ளது.
டாடா நிறுவனத்தின் சஃபாரி மற்றும் ஹக்ஸா போன்ற மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2.17 லட்சம் வரை விலையை குறைத்துள்ள டாடா நிறுவனம் தங்களுடைய டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களுக்கு ரூ. 11,000 முதல் ரூ. 60,000 வரை குறைத்திருப்பதனால் டியாகோ காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டியாகோ கார் 65,000 எண்ணிக்கைகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவினை பெற்ற மாடலாக வலம் வருகின்ற நிலையில் ஜிஎஸ்டிக்கு பிறகு மேலும் விலை சரிந்துள்ளதால் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
க்ராஸ்ஓவர் ரக ஹெக்ஸா எம்பிவி மாடலுக்கு நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் ரூ. 2.17 லட்சம் வரை குறைந்துள்ளதால் மிக சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைப்பு மாநிலம் மற்றும் டீலர்களுக்கு டீலர் என மாறுபடும்.