டாடா நானோ சிஎன்ஜி கார் நானோ இ-மேக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக குறைவான கார்பனை மட்டும் வெளிவிடும் காராக நானோ இ-மேக்ஸ் விளங்கும்.

5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும். சிஎன்ஜி ஒரு கிலோவிற்க்கு 36கிமீ மைலேஜ் தரும். மேலும் பெட்ரோலிலும் நானோ இ-மேக்ஸ் காரை இயக்க முடியும்.

டாடா நானோ இ-மேக்ஸ்

இ-மேக்ஸ் பெட்ரோல் மோடில் 38பிஎஸ் மற்றும் டார்க் 51என்எம் கிடைக்கும்.
சிஎன்ஜி மோடில் 33பிஎஸ் மற்றும் டார்க் 45என்எம் ஆகும்.

நானோ இ-மேக்ஸில் பெரிதான எந்த மாற்றங்களும் கிடையாது. இ-மேக்ஸ் பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும்.டிரைவர் இருக்கையின் அடியில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. தீ அனைக்கும் கருவியை சென்ட்ரல் கன்சோலின் அடியில் பொருத்தியுள்ளனர்.