பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே பெர்ஃபாமென்ஸ் ரக காரினை இந்தியாவில் ரூ.1.71 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே |
பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ
பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களில் M3 செடான் , M4 கூபே, M5 செடான் வரிசையில் மேம்படுத்தப்பட்ட M6 கிரான் கூபே காரும் இணைந்துள்ளது. மேலும் முதன்முறையாக பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் பெர்ஃபாமென்ஸ் ரக கார்களுக்கான பிரத்யேக எம் ஸ்டூடியோ சென்னை , டெல்லி , பெங்களூரூ , புனே , அகமதாபாத் மற்றும் ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் தொடங்க உள்ளனர். மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கு சவாலாக பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ விளங்கும்.
பிஎம்டபிள்யூ நிதி சேவை
பிஎம்ம்டபிள்யூ நிதி சேவை பிரிவு வாயிலாக ரூ.110 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும் பிஎம்ம்டபிள்யூ நிறுவனம் ரூ.640 கோடி இந்திய சந்தையில் முதலீடு செய்கின்றது.
M6 கிரான் கூபே
முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட மாடலில் சில தோற்ற பொலிவினை பெற்றுள்ளது. மற்றபடி தொழிநுட்ப ரீதியாக எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.
M6 கிரான் கூபே காரில் எல்இடி அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , மேம்படுத்தப்பட்ட கிட்னி கிரில் மற்றறஉம் உட்புறத்தில் சில மாற்றங்களை கண்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.
560 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 680 என்எம் ஆகும். இதில் 7 வேக எம் டபூள் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தபட்டுள்ளது.
0 முதல் 100கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 4.2விநாடிகள் எடுத்துக்கொள்ளும். பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ வேகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே கார் விலை ரூ.1.71 கோடி (எக்ஸ்ஷோரூம் மும்பை)
BMW M6 Gran Coupe Launched in India