இந்தியாவில் பிஎம்டபுள்யூ X3 , X5 எஸ்யூவி கார்களில் பெட்ரோல் என்ஜின் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 மாடல்களில் ஒரு வேரியன்ட் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபுள்யூ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள எக்ஸ்3 xDrive28i மற்றும் எக்ஸ்5 xDrive35i மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் தற்பொழுது எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 என இரு எஸ்யூவி கார்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றது.
பிஎம்டபுள்யூ எக்ஸ்3 எஸ்யூவி
எக்ஸ்3 எஸ்யூவி காரில் 245 ஹெச்பி பவர் , 350 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ட்வின்டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 6.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
பிஎம்டபுள்யூ எக்ஸ்5 எஸ்யூவி
எக்ஸ்5 எஸ்யூவி காரில் 306 ஹெச்பி பவர் , 400 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் ட்வின்டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 6.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.
இரு மாடல்களிலும் பிஎம்டபிள்யூ ஆல் வீல் எக்ஸ் டிரைவ் , பிஎம்டபிள்யூ ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , எல்இடி ஹெட்லேம்ப் , 3டி நேவிகேஷன் சிஸ்டம் என பல நவீன சொகுசு வசதிகளை பெற்று விளங்குகின்றது.
புதிய பிஎம்டபுள்யூ X3 , X5 விலை விபரம்
BMW X3 xDrive28i xLine : ரூ. 54,90,000
BMW X5 xDrive35i Design Pure Experience (5 seater) ; ரூ. 73,50,000
( விலை விபரம் டெல்லி எக்ஸ்-ஷோரூம் )