Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

போர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் ஏர்பேக் நிரந்தர அம்சம்

by automobiletamilan
November 7, 2016
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

பிரசத்தி பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான போர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் பேஸ் வேரியன்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் டாப் வேரியன்டில் 6 காற்றுப்பைகள் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே விற்பனைக்கு வந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மாடல்களில் காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் பிரேக் போன்றவை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு வரும் நிலையில் ஃபோர்டு இக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட் பேஸ் வேரியன்டிலும் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கும் காற்றுப்பையை இணைத்துள்ளது. ஆனால் ஏபிஎஸ் மற்றும் இபிடி அம்சங்கள் டிரென்ட் வேரியன்ட் மற்றும் அதற்கு மேல் உள்ள வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

ஃபோர்டு தங்களுடைய அனைத்து மாடல்களிலும் காற்றுப்பை நிரந்தர அம்சமாக இணைக்க தொடங்கியுள்ளது. டாப் வேரியன்டான டைட்டானியம் AT மற்றும் டைட்டானியம் + போன்றவற்றில்  இரு காற்றுப்பைகளுடன் கூடுதலாக 4 காற்றுப்பைகளுடன் மொத்தம் 6 காற்றுப்பைகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லாமலே கிடைக்கும்.

அடுத்த தலைமுறை புதிய போர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் வருகை அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Fordஈக்கோஸ்போர்ட்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version