போர்ஷே கேயேன் எஸ்யூவி காரின் சிறப்பு பதிப்பாக பிளாட்டினம் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இஞ்ஜின் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. வரையறைக்கப்பட்ட கேயேன் பிளாட்டினம் எடிசன் விலை ரூ.1.07 கோடி (பெட்ரோல்) மற்றும் ரூ.1.09 கோடி (டீசல்) ஆகும்.
இஞ்ஜின் ஆற்றலில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் சில கூடுதலான வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பினை மட்டுமே பெற்றுள்ளது. கேயேன் டீசல் வகையில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 245 hp மற்றும் முறுக்குவிசை 550 Nm ஆகும். கேயேன் காரில் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 300 hp மற்றும் முறுக்குவிசை 550என்எம் ஆகும்.
கேயேன் எஸ்யுவி பிளாட்டினம் எடிசன்
20 இன்ச் ஆர்எஸ் ஸ்பைடர் ஸ்டைலில் அலாய் வீல் , 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் லெதர் ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் , கதவுகளில் ஸ்டெயின்லெஸ் டோர் சில்ஸ் , பர்பரைட் மெட்டாலிக் பாடி வண்ணத்தில் கிடைக்கும்.
7 இஞ்ச் தொடுதிரை அமைப்புடன் கூடிய போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் (Porsche Communication Management -PCM ) சிஸ்டத்தில் நேவிகேஷன், கனெக்ட் ப்ளஸ் மாடலுயூ , போஸ் சர்வூன்ட் சிஸ்டம் , ஆப்பிள் கார்பிளே போன்றவை இடம்பெற்றுள்ளது. இதுதவிர மேலும் பல சிறப்பு வசதிகளை பெற்றுள்ள கேயேன் பிளாட்டினம் எடிசனில் குறிப்பிட தக்க மற்ற அம்சங்களான பை-ஸெனான் முகப்பு விளக்குடன் இணைந்த போர்ஷே டைனமிக் லைட் சிஸ்டம் , பவர் ஸ்டீயரிங் ப்ளஸ் , பார்க்கிங் அசிஸ்ட் , போர்ஷே ஏக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்றவை ஆகும்.
கேயேன் பிளாட்டினம் எடிசன் விலை ரூ.1.07 கோடி (பெட்ரோல்)
கேயேன் பிளாட்டினம் ரூ.1.09 கோடி (டீசல்)
(அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் )