போர்ஷே மசான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் ரூ.76.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் நேர்த்தியான மாடலாக மசான் எஸ்யூவி விளங்குகின்றது.
252 குதிரைதிறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 370Nm ஆகும். இதில் 7 வேக PDK ஆட்டோ கியர்பாக்ஸ் மூலம் ஆற்றலை 4 வீல்களுக்கு கடத்துகின்றது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மசான் எஸ்யூவி உச்ச வேகம் மணிக்கு 229 கிமீ ஆகும்.
மேலும் இந்தியாவில் 244 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் S டீசல் வேரியண்ட் மற்றும் 400 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.6 லிட்டர் பை டர்போ பெட்ரோல் என்ஜின் என தற்பொழுது மொத்தம் 3 வேரியண்ட்கள் இந்தியாவில் கிடைக்கின்றது.
நேரடியான போட்டியாளர்கள் மசான் எஸ்யூவி காருக்கு இல்லை என்றாலும் பிஎம்டபுள்யூ எக்ஸ்3 , மெர்சிடிஸ் GLE போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமையும். 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் போர்ஷே மசான் விலை ரூ.76.84 லட்சம் (எக்ஸ்ஷோரூம் ) ஆகும்.