Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா இம்பிரியோ பிக்அப் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
ஜனவரி 6, 2016
in கார் செய்திகள்

ரூ.6.25 லட்சம் விலையில் மஹிந்திரா இம்பிரியோ பிக்அப் டிரக்  சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்யூவி கார்களின் கம்பீரத்தினை முகப்பில் இம்பிரியோ பெற்று விளங்குகின்றது.

mahindra-imperio

மஹிந்திரா சென்னை ரிஸர்ச் வேலியால் வடிவமைக்கப்பட்டு சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இம்பிரியோ டிரக்கில் ஒற்றை கேப் மற்றும் இரட்டை கேப் என இருவிதமான மாடலில் BS III  மற்றும் BS IV என்ஜின் மாசு கட்டுப்பாடு விதிகளின் படி வந்துள்ளது.

75 Hp ஆற்றலை வழங்கும் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 220 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  இதன் மைலேஜ் லிட்டருக்கு 13.55 கிமீ ஆகும். பவர் மற்றும் இக்கோ என இருவிதமான டிரைவிங் மோடினை பெற்றுள்ளது. இம்பிரியோ பிக்அப் டிரக்கின் எடை தாங்கும் திறன் 1240 கிலோ ஆகும்.

mahindra-imperio-single-cab

 

கம்பீரமான எஸ்யூவி முகப்பு தோற்றத்துடன் சைலோ தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இம்பிரோயோ பிக் அப் டிரக்கில் மிக சிறப்பான தோற்றத்தினை தரும் வகையில் அமைந்துள்ள மஹிந்திரா பாரம்பரிய கிரில் மிக பெரிதாக காட்சியளிக்கின்றது. நீலம் , வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.

உட்புறதில் சிங்கிள் கேப் வகையில் டிரைவருடன் ஒருவர் பயணிக்க இயலும் டபுள் கேப் வகையில் டிரைவருடன் 4 நபர்கள் பயணிக்கும் வகையில் சிறப்பான இன்டிரியரை பெற்றுள்ளது. மேலும் ஆடியோ சிஸ்டம் , பவர் வின்டோஸ் , கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா ஸெனான் மற்றும் இசுசூ டி மேக்ஸ் பிக்அப் போன்ற மாடல்களுடன் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் எல்சிவி பிரிவில் அதாவது சிறியரக வர்த்தக வாகன பிரிவில் 53 % பங்களிப்பினை கொண்டுள்ளது.

மஹிந்திரா இம்பிரியோ விலை பட்டியல் பிஎஸ் III

  • Imperio Single Cab  – ரூ. 6.25 லட்சம்
  • Imperio Single Cab VX – ரூ. 6.60 லட்சம்
  •  Imperio Double Cab  – ரூ. 6.60 லட்சம்
  • Imperio Double Cab VX – ரூ. 7.12 லட்சம்

மஹிந்திரா இம்பிரியோ விலை பட்டியல் பிஎஸ் IV

  • Imperio Single Cab  – ரூ. 6.40 லட்சம்
  • Imperio Single Cab VX – ரூ. 6.75 லட்சம்
  •  Imperio Double Cab  – ரூ. 6.60 லட்சம்
  • Imperio Double Cab VX – ரூ. 7.27 லட்சம்

( அனைத்தும் எக்ஸ்ஷோரூம் மும்பை விலை )

இம்பிரியோ பிக்அப் டிரக் படங்கள்

 

 

[envira-gallery id="7175"]

 

Tags: Mahindraபிக்அப்
Previous Post

டெல்லியில் டீசல் கார் தடை தொடரும் : உச்ச நீதிமன்றம்

Next Post

டாடா இம்பேக்ட் டிசைன் மொழி அறிமுகம்

Next Post

டாடா இம்பேக்ட் டிசைன் மொழி அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version