முதல்கட்டமாக 8 நகரங்களில் வெளிவந்துள்ள மஹிந்திரா ரேவா e2o காரின் விலை விபரங்களும் வெளிவந்துள்ளன. தில்லி மாநில அரசாங்கத்தின் வரி சலுகையின் காரணமாகவே தில்லியில் விலை குறைவாக உள்ளது.
மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில் இரண்டு விதமான மாறுபட்டவை உள்ளது. அவை டி0 (0-ஜீரோ) மற்றும் டி2 ஆகும். டி2 டாப் வேரியண்டில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா அசிஸ்ட், ஐ-பாட் தொடர்பு, யூஎஸ்பி, டிவிடி,எம்பி3, போன்ற இன்னும் சில வசதிகள் கூடுதலாக உள்ளன.
பல்வேறு விதமான அதிநவீன வசதிகள் உள்ளன. அவைகளில் சில எங்கிருந்து வேண்டுமானலும் உங்கள் மொபைல் மூலம் கதவினை திறக்கவும் மூடவும் முடியும். உங்கள் மொபைல் மூலம் இணைப்பினை ஏற்படுத்தி அவசர நேரங்களில் கூடுதலாக 8 முதல் 9 கீமி வரை பயணிக்க முடியும்.
மஹிந்திரா ரேவா e2o காரின் உச்சகட்ட வேகம் 81 கீமி ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கீமி பயணிக்கலாம் என மஹிந்திரா கூறியுள்ளது. மிக குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம்.
மார்ச் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்.
புதுதில்லி மாநில அரசு மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காருக்கு அளித்துள்ள வரி சலுகைகள்
1. 12.5 சதவீதம் வாட் வரியை திரும்ப பெற்று கொள்ளலாம்.
2. சாலை வரியில் 50 சதவீதம் குறைத்துள்ளது.
மஹிந்திரா ரேவா e2o விலை பட்டியல்
மஹிந்திரா ரேவா e2o | டி0 | டி2 |
புது தில்லி (ஆன் ரோடு) | ரூ 5.95 லட்சம் | ரூ 6.24 லட்சம் |
பஞ்சாப் & ஹரியானா (எக்ஸ்ஷோரூம்) | ரூ 7.19 லட்சம் | ரூ 7.56 லட்சம் |
மும்பை (எக்ஸ்ஷோரூம்) | ரூ 6.71 லட்சம் | ரூ 7.05லட்சம் |
பெங்களுரூ (எக்ஸ்ஷோரூம்) | ரூ 6.50 லட்சம் | ரூ 6.83 லட்சம் |
ஹைதிராபாத் (எக்ஸ்ஷோரூம்) | ரூ 7.32 லட்சம் | ரூ 7.69லட்சம் |
கொச்சி (எக்ஸ்ஷோரூம்) | ரூ 6.71 லட்சம் | ரூ 7.05 லட்சம் |
அகமதாபாத்(எக்ஸ்ஷோரூம்) | ரூ 7.35 லட்சம் | ரூ 7.73 லட்சம்
|