மாருதி சியாஸ் RS |
இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள சியாஸ் டீசல் மாடலில் ஆர்எஸ் என்ற பெயரில் கூடுதல் துனைகருவிகளை இணைத்து ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை கொடுத்துள்ளனர்.
சியாஸ் ஆர்எஸ் மாடலில் முன்பக்க பம்பரில் லிப்ஸ் , சைட் ஸ்க்ர்ட் , பூட் மேல் ரியர் ஸ்பாயல்லர் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் கருப்பு நிறத்தில் பீஜ் வண்ணத்துடன் இன்ஸ்டூருமென்டல் பேனல்களில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
91 ஹைச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 130என்எம் ஆகும். இதில் 5வேக மெனுவல் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் பொருத்தப்பட்டுள்ளது. மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 20.73 கிமீ மற்றும் தானியங்கி மைலேஜ் லிட்டருக்கு 19.12 கிமீ ஆகும்.
88.5 ஹைச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200என்எம் ஆகும். இதில் 5வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 28.09கிமீ ஆகும்.
இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ஸ்மார்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7 வண்ணங்களில் சியாஸ் RS கிடைக்கும். இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து சியாஸ் ஆர்எஸ் மாடல் வந்துள்ளது
மாருதி சுஸூகி சியாஸ் RS விலை
Maruti Suzuki Ciaz RS Launched