இந்தியாவில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சி கிளாஸ் விலை ரூ. 60 லட்சம் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ விலை ரூ.2.25 கோடி ஆகும்.
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்துள்ள 10 மற்றும் 11வது மாடல்களாக வெளிவந்த கேப்ரியோ வாயிலாக மொத்தம் இந்த வருடத்தில் வெளியாக இருந்த 12 கார்களில் 11 வரை வெளியாகியுள்ளது.
மெர்சிடஸ் சி கிளாஸ் கேப்ரியோ
மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 241 பிஹெச்பி ஆற்றல், 370 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 6.4 வினாடிகளில் எடுத்துக்கொள்ளும்.
சி க்ளாஸ் கேப்ரியோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும். இதில் உள்ள டைனமிக் செலக்ட் டிரைவிங் மோட் வாயிலாக இக்கோ, கம்ஃபார்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிஜூவல் என 5 விதமான டிரைவிங் மோடுகள் பெற்றுள்ளது.
மெர்சிடஸ் சி க்ளாஸ் கேப்ரியோ காரின் விலை ரூ.60 லட்சம்.
மெர்சிடஸ் எஸ் கிளாஸ் கேப்ரியோ
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோ மாடலில் 4.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 455 பிஹெச்பி ஆற்றல், 700 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.6 வினாடிகளில் எடுத்துக்கொள்ளும். எஸ் க்ளாஸ் கேப்ரியோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும்.
மெர்சிடஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோ காரின் விலை ரூ.2.25 கோடி ஆகும்.
(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )