Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மெர்சிடஸ் சி கிளாஸ் , எஸ் கிளாஸ் கேப்ரியோ விற்பனைக்கு வந்தது

by MR.Durai
10 November 2016, 11:26 am
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சி கிளாஸ் விலை ரூ. 60 லட்சம் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ விலை ரூ.2.25 கோடி ஆகும்.

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்துள்ள 10 மற்றும் 11வது மாடல்களாக வெளிவந்த கேப்ரியோ வாயிலாக மொத்தம் இந்த வருடத்தில் வெளியாக இருந்த 12 கார்களில் 11 வரை வெளியாகியுள்ளது.

மெர்சிடஸ் சி கிளாஸ் கேப்ரியோ

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு  அதிகபட்சமாக 241 பிஹெச்பி ஆற்றல், 370 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 6.4 வினாடிகளில் எடுத்துக்கொள்ளும்.

சி க்ளாஸ் கேப்ரியோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும். இதில் உள்ள டைனமிக் செலக்ட் டிரைவிங் மோட் வாயிலாக இக்கோ, கம்ஃபார்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிஜூவல் என 5 விதமான டிரைவிங் மோடுகள் பெற்றுள்ளது.

மெர்சிடஸ் சி க்ளாஸ் கேப்ரியோ காரின் விலை ரூ.60 லட்சம்.

மெர்சிடஸ் எஸ் கிளாஸ் கேப்ரியோ

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோ மாடலில் 4.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு  அதிகபட்சமாக 455 பிஹெச்பி ஆற்றல், 700 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.6 வினாடிகளில் எடுத்துக்கொள்ளும். எஸ் க்ளாஸ் கேப்ரியோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும்.

மெர்சிடஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோ காரின் விலை ரூ.2.25 கோடி ஆகும்.

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

Related Motor News

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்

இந்திய மார்கெட்டில் எலக்ட்ரிக் கார்களை கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது: மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு

டைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் எடிசன் சி விற்பனைக்கு அறிமுகம்

1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

Tags: Mereceds-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan