ரெனோ க்விட் கார் |
போட்டியாளர்களை விட சற்று பெரியதாக காட்சியளிக்கும் க்விட் காரில் பல சிறப்பு வசதிகளை பெற்றுள்ளது. பெட்ரோல் மாடலில் வந்துள்ள க்விட் காரில் தொடுதிரை அமைப்பும் உள்ளது.
தோற்றம்
மினி எஸ்யூவி போல காட்சியளிக்கும் க்விட் காரின் முகப்பு கிரில் ஸ்டப்டூ டைமன்ட் வடிவமைப்பில் கவர்ந்திழுக்கின்றது. முகப்பு விளக்குகள் அறையிலே இன்டிகேட்டர் மற்றும் வட்ட வடிவ பனி விளக்குகள் நேர்த்தியாக உள்ளது.
பக்கவாட்டில் கருப்பு நிற பாடி கிளாடிங் முன்பக்க வீல் ஆர்ச்சில் இன்டிகேட்டர் , நேரத்தியான பக்கவாட்டு கோடுகளை கொண்டுள்ளது. பின்பக்த்தில் கருப்பு நிற பம்பர் மற்றும் நேருத்தியான டெயில் விளக்கினை பெற்று ஸ்டைலிசாக விளங்குகின்றது.
டாப் வேரியண்டில் கூட பாடி வண்ணத்தில் இல்லாத கதவு கைப்பிடிகள் மற்றும் ரியர் வியூ மிரரை பெற்றுள்ளது. 5 விதமான வண்ணங்களில் ரெனோ க்விட் கிடைக்கும்.
இன்டிரியர்
கருப்பு நிற டேஸ்போர்டின் சென்ட்ரல் கன்சோல் பகுதியில் மட்டும் குரோம் பூச்சினை பெற்றுள்ளது,. மிக நேரத்தியான டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரை பெற்றுள்ளது.
பட்ஜெட் காராக இருந்தாலும் டாப் வேரியண்டில் மீடியா நேவ் 7 இஞ்ச் தொடுதிரை டிஸ்பிளே வசதியுடன் வந்துள்ளது. இதில் பூளூடூத் , ரேடியோ மற்றும் நேவிகேஷன் அமைப்பு போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது உட்புறத்தில் சிறப்பான இடவசதி மற்றும் போட்டியாளர்களை விட கூடுதலான பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.
என்ஜின்
பெட்ரோல் என்ஜினில் வரவுள்ள க்விட் காரில் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
சிறப்புகள்
ஸ்டான்டர்டு , RXE , RXL மற்றும் RXT என மொத்தம் 4 விதமான வேரியண்டில் கிடைக்கும். பூட் ஸ்பேஸ் 300லிட்டர் கொள்ளளவு பெற்றுள்ளது. பின் இருக்கைகளை மடக்கினால் 1115 லிட்டர் கிடைக்கும். 7 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , யூஎஸ்பி , ஆக்ஸ பூளூடூத் ரேடியோ மற்றும் நேவிகேஷன் இணைப்பினை பெற்றுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
டாப் வேரியண்டில் மட்டுமே ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் ஆப்ஷனலாக உள்ளது.
ரெனோ க்விட் கார் விலை விபரம்
- க்விட் ஸ்டான்டர்டு – ரூ.3,10 லட்சம்
- க்விட் RXE – ரூ.3.47 லட்சம்
- க்விட் RXE(O) – ரூ.3.54 லட்சம்
- க்விட் RXL – ரூ.3.73 லட்சம்
- க்விட் RXT – ரூ.4.08 லட்சம்
- க்விட் RXT (O)- ரூ.4.19 லட்சம்