ரெனோ நிறுவனத்தின் ரெனோ க்விட் 1.0லி Sce பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.3.82 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. க்விட் 800சிசி விரைவில் 1 லட்சம் டெலிவரி டெலிவரியை எட்ட உள்ளது.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.
சாதரன 800சிசி வேரியண்டில் இருந்து வித்தியாஞப்படும் வகையில் கருப்பு வெள்ளை கலந்த பாடி ஸ்டிக்கரிங் மற்றும் ஓஆர்விஎம் மேல் கிளாஸ் கிரே நிறம் சேர்க்கப்பட்டுள்ளது,
RXT மற்றும் RXT (O) என இரு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்க உள்ள க்விட் 1.0 லி மாடல் வசதிகள் ஓட்டுனர் பக்க காற்றுப்பை , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டியூவல் டோன் டேஸ்போர்டு , பாடிகலர் பம்பர் , ரிமோட் கிலெஸ் என்ட்ரி , முன்பக்க கதவுகளுக்கு பவர் விண்டோஸ் மற்றும் 2 ஸ்பிக்கர்கள் போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.
மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் இயான் போன்ற கார்களுடன் நேரடியான போட்டியாளராக களமிறங்கி உள்ள க்விட் 1.0லி மாடல் சாதரன 800சிசி மாடலை விட ரூ.22,000 விலை மட்டுமே கூடுதலாக RXT மற்றும் RXT (O) அமைந்துள்ளது.
ரெனோ க்விட் 1.0லி எஞ்ஜின் விலை விபரம்
RXT – ரூ.3.82,776
RXT (O) – ரூ.3.95,776
( டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )