புதிய ரெனோ டஸ்டடர் எஸ்யூவி ரூ.8.46 லட்சம் தொடக்க விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. புதிய டஸ்ட்டர் காரில் 105 PS ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.
5 விதமான வேரியண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் வந்துள்ளது. பெட்ரோல் வேரியண்ட் இரு ஆப்ஷனில் மட்டுமே உள்ளது. டீசல் வேரியண்டில் ஏஎம்டி , ஆல்டிரைவ் போன்றவை உள்ளது.
102.6 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 85 PS மற்றும் 105 PS என இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் K9K 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 வேக ஈசி ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 32 விதமான மாற்றங்களை கொண்டுள்ள டஸ்ட்டர் காரில் முக்கிய மாற்றாங்களாக முன்பக்க தோற்றம் மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும். புதிய முகப்பு மற்றும் டெயில் விளக்குகள் , புதிய இன்டிரியர் , 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.
டஸ்ட்டர் விலை விபரம்
பெட்ரோல் மாடல் ரூ. 8.47 லட்சம் முதல் 9.47 லட்சம் வரை
டீசல் மாடல் 85 PS – ரூ. 9.27 லட்சம் முதல் 11.47 லட்சம் வரை
டீசல் மாடல் 110 PS – ரூ.11.07 லட்சம் முதல் 13.57 லட்சம் வரை
{ எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை }