லம்போர்கினி சூப்பர் கார் தயாரிப்பில் தனிமுத்திரையுடன் விளங்கி வருகின்றது.லம்போர்கினி அவென்டேடார் ரோட்ஸ்டார் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.700PS சக்தி கொண்ட லம்போர்கினி அவென்டேடார் ரோட்ஸ்டார் கார் விலை 4.77 கோடியாகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி அவென்டேடார் 1300 கார்ளை உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு லம்போர்கினி விற்ற கார்களின் எண்ணிக்கை 17 ஆகும். இதன் மூலம் இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை எட்டிவருகின்றது.இந்தியாவில் இரண்டு டீலர்கள் மட்டுமே உள்ளனர்.அவை டில்லி மற்றும் மும்பையில் உள்ளது.
அவென்டேடார் ரோட்ஸ்டார்(LP 700) காரின் என்ஜின் 700PS சக்தி கொண்டதாகும்.இதில் பொருத்தப்பட்டுள்ளது 6.5 லிட்டர் என்ஜின் ஆகும். 3 விநாடிகளில் 0-100km வேகத்தை தொடும். இதன் அதிகப்பட்ச வேகம் 350km/hr.
மிக சிறந்த சூப்பர் காரான அவென்டேடார் ரோட்ஸ்டார்(LP 700) பல சிறப்பம்சங்களை கொண்டதாகும்.
வருகிற மாதம் முதல் முன்பதிவு தொடங்குகிறது.ஜூன் மாதத்தில் டெலிவரி செய்வார்கள்..