ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் காரினை ஸ்கோடா விற்பனைக்கு  கொண்டு வந்துள்ளது. ஸ்கோடா ரேபிட் பிரீஸ்டீஜ் என்ற பெயரில் கூடுதலான சில வசதிகளுடன் ரூ 8.99 லட்சத்திற்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் பிரீஸ்டீஜ் டீசல் காரில் மட்டும் கிடைக்கும். ரேபிட் பிரீஸ்டீஜ் செடான் காரில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் பார்க்கிங் சென்சார், நேவிகேஷன் அமைப்பு , வின்ட் சென்சார், மற்றும் தரை விரிப்பு போன்றவை இருக்கும்.
1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 105 பிஎச்பி ஆகும். 
ரேபிட் பிரீஸ்டீஜ் விற்பனை சரிவினை ஈடுகட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா ரேபிட் பிரீஸ்டீஜ் கார் விலை ரூ 8.99 லட்சம் ஆகும். (தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)