இந்தியாவின் ஹோண்டா நிறுவனம் ஜாஸ் காரில் உள்ள அனைத்து வேரியன்டிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் கார் விலை ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அதாவது ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான காற்றுப்பைகளை நிரந்தர அம்சமாக அனைத்து வேரியன்டிலும் சேர்க்க தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் ஹோண்டா ஜாஸ் காரும் இடம்பிடித்துள்ளது.
முந்தைய E மற்றும் S பேஸ் வேரியன்ட்கள் காற்றுப்பைகளை பெறாத நிலையில் தற்பொழுது டியூவல் ஏர்பேக் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இரு காற்றுப்பை சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாஸ் காரின் இரு வேரியன்டின் விலையும் ரூ.12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய நடுத்தர ,டாப் வேரியன்ட்களான V, SV மற்றும் VX போன்றவற்றில் உள்ள வசதிகள் மற்றும் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
ஹோண்டா ஜாஸ் காரில் 1.5 லிட்டர் i-DTEC டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இதன் ஆற்றல் 100 ஹெச்பி மற்றும் 200 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் ஆற்றல் 90 ஹெச்பி மற்றும் 110 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோபாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது.