இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ரக ரோட்ஸ்டெர் மாடலான மெர்சிடிஸ் ஏஎம்ஜி SL 55 காரின் விலை ரூ.2.35 கோடி (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்எல் ரோட்ஸ்டெர் 55 மாடலில் சக்திவாய்ந்த 476 ஹெச்பி பவரை வழங்குகின்ற என்ஜின் பொருத்தப்பட்டு முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறகுமதி செய்யப்பட்டு விற்பனை செய்ய உள்ளது.
Mercedes AMG SL 55
மெர்சிடிஸ் AMG SL 55 காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ, V8 பெட்ரோல் என்ஜின் 476hp பவர் மற்றும் 700Nm டார்க் வழங்குகின்றது. இதில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது 4Matic+ அமைப்பு வழியாக நான்கு சக்கரங்களுக்கும் பவரை அனுப்புகிறது. SL 55 ஆனது 0-100kph வேகத்தை 3.9 வினாடிகளில் அடையும். 295kph என்ற அதிகபட்ச வேகத்தைக் கொண்டுள்ளது.
ஏஎம்ஜி SL 55 காரில் அகலமான பெரிய பனாமெரிகானா முன்பக்க கிரில், எல்இடி ஹெட்லைட், இரண்டு பவர் டோம் பெற்ற நீண்ட பானட், ஒரு கனமான ரேக் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீன், குவாட் எக்ஸாஸ்ட் மற்றும் 20-இன்ச் அலாய் ஆகியவை உள்ளன. வாங்குபவர்கள் வேறு வடிவமைப்பு கொண்ட பெரிய 21 அங்குல அலாய் வீலை தேர்வு செய்யலாம்.
நான்காம் தலைமுறை SL மாடலுக்கு பிறகு முதல் முறையாக, புதிய SL மூன்று அடுக்கு துணி கூரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல் பயன்படுத்திய உலோக கூரையை விட 21 கிலோ எடை குறைவாக உள்ளது. இது சென்டர் கன்சோலில் உள்ள சுவிட்ச் அல்லது இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இது 60kph வேகத்தில் பயன்படுத்தப்படலாம் மற்றும் திறக்க அல்லது மூடுவதற்கு 16 வினாடிகள் ஆகும். துணி கூரைக்கு கருப்பு, அடர் சிவப்பு மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களும் உள்ளன.