ரூ.91,000 வரை ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் விலை சரிவு

போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் கார்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஃபிகோ கார் விலை ரூ. 21,000 முதல் ரூ.50,000 வரை மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் விலை ரூ. 25,000 முதல் ரூ.91,000 வரை சரிந்துள்ளது.

முந்தைய தலைமுறை ஃபிகோ காருக்கு இனையாக புதிய ஃபிகோ விற்பனை இல்லாத நிலையில் போட்டியாளர்களான ஸ்விஃப்ட் , கிராண்ட் ஐ10 போன்ற மாடல்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் ஃபிகோ சந்தையில் உள்ளது. ஃபிகோ ஆஸ்பயர் கார் டிசையர் ,அமேஸ் மற்றும் எக்ஸசென்ட் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகின்றது.

ஃபிகோ , ஆஸ்பயர் இஞ்ஜின்

87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

110பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 136என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

98.6பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 215என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ விலை

ஃபிகோ பெட்ரோல் விலை பட்டியல்

 வேரியண்ட் பழைய விலை புதிய விலை வித்தியாசம்
1.2 BaseRs. 453,700Rs. 453,700 -இல்லை
1.2 AmbienteRs. 482,700Rs. 482,700–இல்லை
1.2 TrendRs. 523,700Rs. 523,700–இல்லை
1.2 TitaniumRs. 594,700Rs. 565,700Rs. 29,000
1.5 Titanium ATRs. 727,100Rs. 727,100–இல்லை
1.2 Titanium+Rs. 658,700Rs. 628,700Rs. 30,000

ஃபிகோ டீசல் விலை பட்டியல்

Variantபழைய விலைபுதிய விலைவித்தியாசம்
1.5 BaseRs. 562,750Rs. 562,750—இல்லை
1.5 AmbienteRs. 591,750Rs. 591,750—இல்லை
1.5 TrendRs. 632,750Rs. 632,750—இல்லை
1.5 TitaniumRs. 703,750Rs. 653,750Rs. 50,000
1.5 Titanium+Rs. 767,750Rs. 717,750Rs. 50,000

ஃபிகோ ஆஸ்பயர் விலை விபரம்

ஃபிகோ ஆஸ்பயர் பெட்ரோல் விலை

வேரியண்ட்பழைய விலைபுதிய விலைவித்தியாசம்
1.2 AmbienteRs. 528,150Rs. 528,150—இல்லை
1.2 TrendRs. 601,150Rs. 576,150Rs. 25,000
1.2 TitaniumRs. 690,150Rs. 599,150Rs. 91,000
1.5 Titanium ATRs. 819,750Rs. 819,750—இல்லை
1.2 Titanium+Rs. 745,150Rs. 680,150Rs. 65,000

ஃபிகோ ஆஸ்பயர் டீசல் விலை

வேரியண்ட்பழைய விலை புதிய விலைவித்தியாசம்
AmbienteRs 637,850Rs 637,850—இல்லை
TrendRs 710,850Rs 685,850Rs 25,000
TitaniumRs 799,850Rs 708,850Rs 91,000
Titanium+Rs 854,850Rs 789,850Rs 65,000

(  ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் )