Site icon Automobile Tamilan

ஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார்களில் அதிகளவு ஆற்றலை கொண்ட புதிய RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் இந்தியாவில் 1.65 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவுக்காகவே உருவாகப்பட்டுள்ள இந்த காரின் செயல்திறன், 45bhp மற்றும் 50Nm டார்க்யூ உடன் வழக்கமான மாடல்களில் உள்ளதை போன்று 552 குதிரை திறனுடன் உள்ளது. RS6 அவண்ட், 100kph வேகத்தை 3.9 செகண்டுகளில் எட்டி விடும். இதை விட RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் வகை கார்கள் அதிவேகத்துடன் இருக்கும் அவை 0.2 செகண்டுகளில் இதே தூரத்தை கடக்கும்.

இந்த கார்கள் 5.0 லிட்டர் டூவின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இந்த இன்ஜின் 597bhp ஆற்றலை உருவாக்குவதுடன், 750Nm டார்க்யூ-வை கொண்டதாகவும் இருக்கும். இத்துடன் 8-ஸ்பீட் டிப்டிரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஆடி கார்களின் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் அமைப்பு போன்றே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அதிகபட்ச வேகம் எலெக்ட்ரானிக் முறையில் 250kmph-ஆக லிமிட் செய்யப்பட்டுள்ளது, ஆனாலும், டைனமிக் பேக்கேஜ்-ஐ 305kmph-ஆக அதிகரித்து கொள்ள முடியும்.

இந்த பெர்பாமன்ஸ் வெர்சன்கள், பெரியளவிலான 21 இன்ச் அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ஹாஸ்ட், கான்ட்ராஸ்ட் நிறத்தில் பிராண்ட் ஸ்பிலிட்டர், டோர் மிரர், ரியர் டிப்யுசர் மற்றும் முன்புற கிரிலில் குவட்டரோ பேட்ஜ்ஜிங் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. தொழிற்நுட்ப வசதிகளை பொருத்தவரை, பாதுகாப்பு கிட் மற்றும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளது. RS6 அவண்ட், அடிட்டிவ் ஏர் சஸ்பென்ஸ்சன் மற்றும் சிலிண்டர் டிஆக்டிவேசன் செயல்பாடுகளை கொண்டது. இதன் மூலம், எமிசனை குறைப்பத்துடன், எரிபொருள் பயன்பாடும் மேம்படுத்தப்படும்.

Exit mobile version