ஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ்யுவி காரில் பண்டிகை காலத்தை ஒட்டி சிறப்பு இகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிசன் ரூ. 9.62 லட்சம் விலையில்  பிளாக் டைட்னானியம் வேரியன்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சிங்நேச்சர் பதிப்பில் ரூ.37,894 மதிப்பில் கூடுதல் வசதிகள் மற்றும் துனைகருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கருப்பு வண்ணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள சிக்னேச்சர் பதிப்பில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , கருப்பு வண்ண கிரில் , 16 இன்ச் கருப்பு நிற அலாய் வீல் , மேற்கூறையில் கருப்பு வண்ண கேரியர் , சிறப்பு பதிப்பு கிராபிக்ஸ் , போன்றவற்றுடன் இன்டிரியரில் கருப்பு நிற வண்ணத்திலான இருக்கைகளில் சிவப்பு நிற ஸ்டிச்சிங் , கருப்பு வண்ண மிரர் கவர் என பலவற்றை பெற்றுள்ளது. ஃபோர்டு சிங்க் 2.0 ஆப்லிங் , மல்டிபிள் காற்றுப்பை , ஏபிஎஸ், இபிடி , மழையை உணர்ந்து செயல்படும் தானியங்கி வைப்பர் என பல வசதிகளை பெற்றுள்ளது.

என்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஸ்பெஷல் எடிசன் மாடல் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100 hp ஆற்றலை வெளிப்படுத்தும்  1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட பிளாக் டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிக்னேச்சர் எடிசன் மாடல் ரூ.9,26,194 ஆகும் (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)