Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டாடா ஜெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்

By MR.Durai
Last updated: 22,August 2016
Share
SHARE

டாடா மோட்டார்சின் டாடா ஜெஸ்ட் செடான் காரின் 50,000 விற்பனை இலக்கினை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் டாடா ஜெஸ்ட் ஸ்போர்ட்ஸ் சிறப்பு வரையறுக்கப்பட்ட எடிசன் கூடுதலான துனை கருவிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

டீலர்கள் வாயிலாக கூடுதல் துனை கருவிகளை பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ள டாடா ஜெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலில் ரூ.33,000 மதிப்புள்ள இலவச வாகன காப்பீடு , ரூ. 30,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.68,000 மதிப்பில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. சாதரன வேரியண்ட் மாடலை விட செஸ்ட் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.20,000 விலை கூடுதலாக இருக்கும்.

ஜெஸ்ட்  ஸ்போர்ட்ஸ் பதிப்பில் பாடி கிட் , சிவப்பு வண்ண ஸ்கர்ட் , பாடியின் மேற்கூறையில் கருப்புவண்ணம் , சிவப்பு வண்ண ஓஆர்விஎம் , க்ரோம் பூச்சு , பம்பர் பராடெக்டர் , சைட் வைசர் மற்றும் அலாய் வீல் போன்றவற்றுடன் உட்புறத்தில் புதிய இருக்கை கவர்கள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றிருக்கும்.

டாடா ஜெஸ்ட் எஞ்ஜின்

டாடா ஜெஸ்ட் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 88 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2லிட்டர் ரெவோட்ரான் டர்போசார்ஜடு பெட்ரோல் எஞ்ஜின் டார்க் 140 Nm டார்க் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3லிட்டர் குவாட்ராஜெட் டீசல் இஞ்ஜின் இருவிதமான ஆற்றலில் கிடைக்கின்றது.  73bhp ஆற்றலுடன்  190 Nm டார்க் மற்றும் 88bhp ஆற்றலுடன் 200Nm டார்க் வெளிப்படுத்தும். இவற்றில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 88bhp  வேரியண்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் உள்ளது.

டிசையர் , எக்ஸ்சென்ட் , அமேஸ் ,அமியோ போன்ற செடான் கார்களுடன் டாடா ஜெஸ்ட் கார் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது. 2 ஆண்டுகளில் 50,000 ஜெஸ்ட் கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

image source : Autosarena.com

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Tata
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms