Site icon Automobile Tamilan

டாடா டிகோர் காரின் முன்பதிவு ஆரம்பம்

வருகின்ற மார்ச் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள டாடா டிகோர் காரினை ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். டிகோர் ஸ்டைல்பேக் எனப்படுகின்ற மிக நேர்த்தியான பூட்டினை பெற்றுள்ளது.

டிகோர் முன்பதிவு

இந்த காரில் 69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் முழுவிபரங்களுக்கு ; டாடா டிகோர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

டீலர்கள் வாயிலாக ரூ.5000 செலுத்தி இன்றே முன்பதிவினை செய்து கொள்ளலாம். டியாகோ காரினை போன்றே மாபெரும் வெற்றியை டிகொர் பதிவு செய்யும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Exit mobile version