Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டாடா ஹெக்ஸா விலை விபரம் வெளியானது

By MR.Durai
Last updated: 18,January 2017
Share
SHARE

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டாடா ஹெக்ஸா விலை ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெக்ஸா கார் ஆனது எக்ஸ்யூவி 500 மற்றும் இனோவா க்ரீஸ்டா என இருமாடல்களுக்கும் நேரடியான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹெக்ஸா டிசைன்

டாடா மோட்டாசின் மிக நேர்த்தியான இம்பேக்ட் டிசைன் வடிவ மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது காராக ஹெக்ஸா (முதல் மாடல் டியாகோ) வந்துள்ளது. இந்த காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , பக்கவாட்டில் மிக உயரமான 19 இன்ச் அலாய்வீல் , பாடிகிளாடிங் , ஸ்டைலிசான ரியர் கதவுகளை கொண்டுள்ளது.

முந்தைய ஆரியா காரிலிருந்து மாறுபட்ட  காராக விளங்குகின்ற ஹெக்ஸாவின் அளவுகள் 4,788 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும் மற்றும் 1,780 மிமீ உயரத்துடன் சிறப்பான இடவசதி தரவல்ல வீல்பேஸ் 2,850 மிமீ ஆகும். இந்த காரில் நீலம் , சில்வர் , கிரே  , வெள்ளை மற்றும் பிளாட்டினம் சிலவர் என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

இன்டிரியரில் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற இந்த காரில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன் , நேவிகேஷன் அமைப்பு , 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் , நேர்த்தியான புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை பெற்றிருக்கும்.

டாடா ஹெக்ஸா எஞ்சின்

எஸ்யூவி க்ராஸ்ஓவர் காரான ஹெக்ஸாவில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும்  156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்  2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு எஞ்சின் தேர்வான வேரிகார் 320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியன்டிலும் அடிப்படையான இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. உயர்ரக வேரியன்டில் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல் , எஞ்சின் டிராக் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார் என பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.

டாடா ஹெக்ஸா  விலை பட்டியல்

டாடா ஹெக்ஸா வேரியன்ட் விலை பட்டியல் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)
XE  ரூ. 11.99 லட்சம்
XM ரூ. 13.85 லட்சம்
XT ரூ. 16.20 லட்சம்
XMA (Automatic) ரூ. 15.05 லட்சம்
XTA (Automatic) ரூ. 17.40 லட்சம்
XT (4×4) ரூ. 17.49 லட்சம்

ஹெக்ஸா காரின் படங்கள்

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Tata
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms