2015 பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி விற்பனைக்கு வந்தது

1 Min Read
இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி ரூ.1.15 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. எம் ஸ்போர்ட் பெர்ஃபாமென்ஸ் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 ஒரு வேரியண்டில் மட்டும் வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி
பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி

பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி ஸ்போர்ட் ஏக்டிவிட்டி கூபே ரக மாடலில் முன் மற்றும் பின் பம்பர்கள் , இன்டிரியர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோற்றம்

புதிய பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி காரில் முன் மற்றும் பின்புற பம்பர்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு மிகவும் மிரட்டலான தோற்றத்தினை தருகின்றது. முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டில் 19 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது. மேலும் பின்புறத்தில் எல் வடிவ முப்பரிமான டெயில்கேட் எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

உட்புறம்

 உட்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட இண்டிரியர் எம் ஸ்போர்ட் லெதர் அப்ஹோல்சரி , எம் ஸ்போர்ட் பேட்ஜ் டிசைன் கதவு சில்ஸ் , ஹேட் அப் டிஸ்பிளே, நைட் விஷன் , ஐ டிரைவ் போன்ற பல வசதிகளை 2015 பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யுவி பெற்றுள்ளது.

என்ஜின்

xDrive40d வேரியண்டில் மட்டும் வந்துள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரில் 313எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 600என்எம் ஆகும். 8 வேக தானியங்கி பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். பிஎம்டபிள்யூ எக்ஸ்6 உச்சகட்ட வேகம் மணிக்கு 240கிமீ ஆகும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரில் 6 காற்றுப்பகள் , டைனமிக் நிலைப்புதன்மை கட்டுப்பாடு , மலை பாதையில் கட்டுப்பாடு , கார்னரிங் பிரேக் கட்டுப்பாடு போன்ற பல நவீன பாதுகாப்பு அம்சங்கள பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எஸ்யுவி விலை ரூ.1.15 கோடி (ex-showroom, India) ஆகும்.

All New BMW X6 Sports Activity Coupe launched in India

TAGGED:
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.