இன்று விற்பனைக்கு வரவுள்ள 2017 நிஸான் டெரானோ எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள புதிய வசதிகளின் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது.

2017 நிஸான் டெரானோ

  • புதிய டெரானோ எஸ்யூவி மாடலில் தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளை மட்டுமே பெற்றிருக்கும்.
  • என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
  • டஸ்ட்டர் , க்ரெட்டா .பிரெஸ்ஸா ,டியூவி300, ஈக்கோஸ்போர்ட் போன்ற எஸ்யூவிகளுடன் போட்டியிடுகின்றது.

XLP, XED, XLD (O), XVD Pre மற்றும் XVD Pre AMT என மொத்தம் 5 விதமான வேரியன்டுகளில் வரவுள்ள 2017 நிஸான் டெரானோ மாடலில் புதிய வசதியாக ஃபேபரிக் இருக்கை , அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய டோர் டிசைன் , க்ரூஸ் கன்ட்ரோல் , நேவிகேஷன் உள்பட பல புதிய வசதிகளுடன் கூடுதலாக புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

 

என்ஜின் ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனையில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவை 84 bhp ஆற்றலுடன் மற்றும் 200 Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 108 bhp மற்றும் 243 Nm டார்க் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்சுடனும் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டெரானோ காரின் போட்டியாளர்கள் டஸ்ட்டர் , க்ரெட்டா .பிரெஸ்ஸா ,டியூவி300, மற்றும் ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களாகும்.

 

மேலும் படிக்கலாமே..! டெரானோ கார் மற்றும் நிசான் கார் செய்திகள் பற்றி படிக்க..!

spec image -cars24.com