கடந்த மே 16-ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட மாருதி சுசுகி டிசையர் காரில் ஸ்டீயரிங்  அசெம்பிளி பகுதியில் கோளாறு உள்ளதால் விற்பனை செய்யப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் டீலர்களின் வாயிலாக ஸ்டீயரிங் அசெம்பிளி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி டிசையர்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மூன்றாவது தலைமுறை டிசையர் கார் மே 16ந் தேதி வெளியிடப்பட்டு தற்போது 50,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள நிலையில் புதிய டிசையரின் ஸ்டீயரிங் அசெம்பிளி பாகத்தில் பிரச்சனைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட 2017 மாருதி டிசையரின் அனைத்து கார்களிலும் இந்த பிரச்சனை இருப்பதாக டீம் பிஹெச்பி உறுப்பினர் பதிவு செய்துள்ளார். எனவே டீலர்களுக்கு புதிய ஸ்டீயரிங் அசெம்பிளி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசையர் கார் எஞ்சின் விபரம்

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர்  வழங்கும்.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நண்பர்கள் எவேரேனும் அறிந்திருந்தால் உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!