மேம்படுத்தப்பட்ட 2017 டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார் ரூ.16.17 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய வண்ணத்திலான இன்டிரியர் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.
டொயோட்டா கரோல்லா அல்டிஸ்
- ரூ.17.65 லட்சம் ஆரம்ப விலையில் டொயோட்டா கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல் கிடைக்கின்றது.
- புதிய எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் பை -பீம் எல்இடி ஹெட்லேம்பை பெற்றுள்ளது.
- புதிதாக பான்டம் பிரவுன் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
150க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற கரோல்லா செடான் கார் 44 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மிக சிறப்பான மாடலாகும். இந்தாயாவில் கரோல்லா அல்டிஸ் மாடலானது ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக விளங்குகின்றது.
புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் காரில் புதிய பம்பருடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் இணைந்த எல்இடி முன்பக்க விளக்குடன் பக்கவாட்டில் 16 அங்குல அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.
இன்டிரியரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , அனைத்து பெட்ரோல் வேரியண்டிலும் 5 காற்றுப்பைகள் மற்றும் டீசல் வேரியன்டில் 3 காற்றுப்பைகள் உள்பட ஏபிஎஸ் , இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாக கொண்டுள்ளது.
138 hp ஆற்றலுடன் 173 Nm டார்க்கினை வழங்கவல்ல திறன்பெற்ற 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
87 hp ஆற்றலுடன் 205 Nm டார்க்கினை வழங்கவல்ல 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ்இடம்பெற்றுள்ளது.
புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ்
கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடல் விலை
- G: ரூ. 16.17,400 லட்சம்
- G CVT: ரூ. 17,82,400 லட்சம்
- GL: ரூ. 18,60,400 லட்சம்
- VL CVT: ரூ. 20,21,400 லட்சம்
கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல் விலை
- DG: ரூ. 17,65,900 லட்சம்
- DGL: ரூ. 19,34,900 லட்சம்
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் சென்னை )