ஹூண்டாய் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல்களில் மிக முக்கயமானதாக விளங்குகின்ற ஐ20 காரின் கூடுதல் வேரியன்டாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற ஆட்டோமேட்டிக் ரூ.7.04 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஹூண்டாய் ஐ20 சிவிடி

முந்தைய ஐ20 ஆட்டோமேட்டிக் மாடலை விட விலை சற்று குறைவானதாக அமைந்திருந்தாலும், ஐ20 பெட்ரோல் மாடலில் மேக்னா மற்றும் ஆஸ்டா ஆகிய இரு வேரியன்ட்களில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.இந்த வேரியன்ட் மேனவல் மாடலை விட ரூ.1 லட்சம் வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

83 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 1.2 லிட்டர் எஞ்சின் 115 என்எம் இழுவைத் திறனை பெற்று சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸை கொண்டதாக தோற்ற அமைப்பு மற்றும் வசதிகள் உட்பட அனைத்திலும் மேனுவல் வேரியன்டில் உள்ள வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஐ20 காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூம் இடம்பெற்றுள்ளதால் மாருதி பலேனோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ளது.

i20 சிவிடி – ரூ. 7.04 லட்சம் (Magna)

i20 சிவிடி – ரூ. 8.16 லட்சம் (Asta)