ரூ.60.60 லட்சம் ஆரம்ப விலையில் எஸ்யூவி கூபே ரக பிஎம்டபிள்யூ X4 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
பிஎம்டபிள்யூ X4 எஸ்யூவி
மிக வசீகரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் எக்ஸ்4 காரில் இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிட்னி கிரில் மிக அகலமான ஏர் இன்டேக் அமைப்பை வெளிப்படுத்துகிறது. அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி பனி விளக்கை கொண்டுள்ள எக்ஸ் 4 காரில் 19 அங்குல லைட் அலாய் வீல் பெற்று விளங்குகின்றது.
இன்டிரியரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவற்றுடன் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.
எம் ஸ்போர்ட்டிவ் மாடலாக வந்துள்ள எக்ஸ்4 காரில் ஸ்டீயரிங் வீல், இருக்கைகளில் பேட்ஜ், மற்றும் அலாய் வீல், பிரேக் காலிப்பர்களில் எம் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.
எக்ஸ்4 எஸ்யூவி மாடல் இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பிஎம்டபிள்யூ X4 எஸ்யூவி மாடலில் உள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின், அதிகபட்சமாக 190 hp பவர் மற்றும் 400 NM டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது xDrive20d என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.
3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெற்ற டீசல் என்ஜின், அதிகபட்சமாக 265 hp பவர் மற்றும் 620 NM டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது xDrive30d என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.
2.0 லிட்டர் டீசல் என்ஜின், அதிகபட்சமாக 252 hp பவர் மற்றும் 350 NM டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது xDrive30i என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.
இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என மூன்று என்ஜின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஈக்கோ ப்ரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் ஆகிய 4 விதமான நிலைகளில் இயங்க்கூடிய டிரைவிங் மோடுகளை பெற்று விளங்குகின்றது.
பிஎம்டபிள்யூ X4 விலை பட்டியல்
BMW X4 xDrive20d M Sport X : INR 60,60,000
BMW X4 xDrive30d M Sport X : INR 65,90,000
BMW X4 xDrive30i M Sport X : INR 63,50,000
(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)