இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஃபோர்டு ஃபிகோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 5.15 லட்சம் தொடங்கி ரூபாய் 8.09 லட்சம் வரையிலான விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது. புதிய ஃபிகோ காரில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை காணலாம்.
முந்தைய மாடலை விட 70 ஆயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ள புதிய காரில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மொத்தமாக 7 வேரியன்ட்களில் கிடைக்கின்றது.
ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள என்ஜின் மற்றும் சிறப்புகள்
புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். அடுத்தாக உள்ள புதிதாக இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
டீசல் என்ஜின் தேர்வில் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் , 5 வேக மேனுவல் கியர்பாக்ஸை கொண்டதாக உள்ளது.
தோற்ற அமைப்பில் புதிய ஃபிகோ ஃபேஸல்லிஃப்ட் குறிப்பிட்ட அளவு மாற்றங்களை பம்பர், கிரில் உள்ளிட்ட பகுதிகளிலும், 15 அங்குல அலாய் வீல் கொண்டதாகவும், இன்டிரியரில் இல மேம்பாடுகளுடன் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இந்நிறுவனத்தின் SYNC3 வசதி வழங்கப்படவில்லை.
பாதுகாப்பு சார்ந்த இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் இணைந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இருக்கை பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி போன்றவை அடிப்படை அம்சமாக அனைத்து வேரியன்டிலும் உள்ளது. டாப் டைட்டானியம் புளூ வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்றவை உள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 மற்றும் வேக்ஸ்வ்வேகன் போலோ உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
ஃபிகோ காரின் விலை பட்டியல்
1.2 லிட்டர் பெட்ரோல்
ஆம்பியன்ட் – ரூ. 5.15 லட்சம்
டைட்டானியம் – ரூ. 6.39 லட்சம்
டைட்டானியம் BLU – ரூ. 6.94 லட்சம்
1.5 லிட்டர் டீசல் என்ஜின்
ஆம்பியன்ட் – ரூ.. 5.95 லட்சம்
டைட்டானியம் – ரூ.. 7.19 லட்சம்
டைட்டானியம் BLU – ரூ. 7.74 லட்சம்
1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டைட்டானியம் – ரூ. 8.09 லட்சம்