Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2019 ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
March 7, 2019
in கார் செய்திகள்

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்துள்ள ஹோண்டா சிவிக் காரின் ஆரம்ப விலை 17.70 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

முதன்முறையாக இந்தியாவில் ஹோண்டா சிவிக் காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2019 ஹோண்டா சிவிக் கார் விலை மற்றும் சிறப்புகள்

2019 ஹோண்டா சிவிக் காரின் நீளம் 4,656 மிமீ , 1,799 மிமீ அகலம், 1,433 மிமீ உயரமும் கொண்டதாக விளங்குகின்றது. இந்த காரின் சிறப்பான 2,700 மிமீ வீல்பேஸ் பெற்றிருப்பதால் உட்புறத்தில் மிகவும் தாராளமான இடவசதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலனுடன், 430 லிட்டர் கொள்ளளவு பூட் ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த கார் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் விளங்குகின்றது.

1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 141 hp பவர் மற்றும் 174 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்திருக்கின்றது. பேடில் ஷிஃப்ட் வசதியும் இருக்கின்றது. 2019 சிவிக் காரின் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமசாக 120 hp பவர் மற்றும் 300 Nm டார்க் திறனையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது.

டாப் வேரியன்டில் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், கொண்ட புதிய சிவிக் காரில் மிக ஸ்டைலிஷான தோற்ற பொலிவுடன், 17 அங்குல அலாய் வீல் பெற்றிக்கின்றது. இன்டிரியரில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு பெற்றதாக உள்ளது.  சிவிக் காரில் வெள்ளை, சிவப்பு, சில்வர், ஸ்டீல் மற்றும் பிரவுன் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

2019 ஹோண்டா சிவிக் பெட்ரோல் கார் மாடல்

V CVT – ரூ. 17.69 லட்சம்
VX CVT – ரூ. 19.19 லட்சம்
ZX CVT – ரூ. 20.99 லட்சம்

சிவிக் டீசல் மாடல்

VX MT – ரூ. 20.49 லட்சம்

ZX MT – ரூ. 22.29 லட்சம்

டொயோட்டா கரோல்லா ஆல்டிஸ், ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Tags: HondaHonda civicஹோண்டா சிவிக்
Previous Post

2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்

Next Post

மார்ச் 26-ல் ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

Next Post

மார்ச் 26-ல் ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version